பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 371 நிறுத்திவிட்டான். இராமன் அம்பை மேலே செல்லாமல் தடுத்து நிறுத்திய ஒரே பாத்திரம் இராமாயணம் முழுவதிலும் வாலி என்பவனே ஆகும். வியப்பிலும், ஐயத்திலும் ஆழ்ந்துவிட்ட வாலி, அந்த அம்பைத் தடுத்து நிறுத்தியதன் நோக்கம், அதை எய்திவன் யார் என்பதை அறிவதற்கேயாம். நாணத்தின் காரணம் அம்பில் பொறிக்கப் பெற்ற பெயர், இரண்டு எழுத்துக்களால் ஆயது. அதன் தன்மையைக் கூறவந்த கவிஞன், 'செம்மை சேர் நாமம்' என்று கூறுகிறான். அந்தப் பெயரைக் கண்டவுடன், வாலிக்கு ஆத்திரமோ, சினமோ முதலில் தோன்றவில்லையாம். அதற்குப் பதிலாக வெட்கப்பட்டானாம். ஏன் தெரியுமா? சூரிய குலம், இராமன் பிறந்த காரணத்தால் நல்லறம் துறந்துவிட்டது என்றுதான் நாணம் அடைந்தான். "தந்தை சொன்னான் என்பதற்காக வனத்திடை வந்தவன், கேவலம் என் பொருட்டால் வில் அறம் துறந்துவிட்டானே!" என்று நினைத்தவுடன் சிரிப்பு வந்துவிட்டதாம் வாலிக்கு. இவ்வாறு வாலி நினைக்கக் காரணம் யாது? சுத்த வீரனாகிய வாலி, வீரத்தைப் பற்றிக்கொண்டிருந்த விழுப்பொருளின் அடிப்படையில் பிறந்தது இந்நகை தூய வீரம் தேவையற்ற இடத்தில் போர் செய்யத் துணியாது; காரணமில்லாமல் ஒருவனைக் கொல்ல விரும்பாது. எல்லாவற்றையும் விட, மறைந்து நின்று ஒருவன் மேல் சுத்த வீரன் அம்பு எய்ய மாட்டான். இவை அனைத்தும், வாலியின் மனத்தில் துய வீரம் பற்றிக் கொண்டிருந்த விழுப்பொருள்கள். . இத்தகைய விழுப்பொருள்களை, உயிரினும் மேலாக மதித்திருந்தான் வாலி. இந்த மனநிலையில்தான்