பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 + கம்பன் - புதிய பார்வை இராமனைப் பற்றி அவன் எடைபோட்டிருந்தான். அவன் மனைவியாகிய தாரை, இராமன் சுக்ரீவனுக்குத் துணையாக வந்துள்ளான் என்று கூறியதைக் கேட்ட வாலி, பெருங் கோபங் கொள்கிறான். ஏன் தெரியுமா? அவன் எவ்வெவற்றை உயிரினும் மேலான விழுப்பொருள்கள் என்று கருதி இருந்தானோ, அவற்றைக் கெண்டே, தசரதன் புத்திரனை எடைபோட்டிருந்தான். தன் குறிக்கோளாக இருந்த விழுப்பொருள்களுக்கு நேரிய உதாரணமாக உள்ளவன் இராமன் என்று எண்ணியிருந்தான் வாலி. ஆகவே வாலி சுக்ரீவனுக்குத் துணையாக இராமன் வந்துள்ளான் என்று கூறிய தன் மனைவி தாரையைப் பெரிதும் கோபித்துக் கொண்டான். அத்துணைத் துாரம் தன் விழுப்பொருளுக்கு ஒரு வடிவமாக அமைந்தவன் இராமன் என்று நினைத்திருந்த வாலிக்கு, இப்பொழுது இராமன் அம்பைக் கண்டவுடன் பெருத்த இடி விழுந்தது போல் ஆயிற்று. அவன் கருதுகோளாக இருந்த விழுப்பொருள், கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. எனவேதான், நாணத்தால் சிரித்துவிட்டான் வாலி. இராமன் பெயர் அம்பில் பொறித்திருந்தாலும், அதைப் பார்த்தவுடன் நம்பத் தயாராக இல்லை வாலி. தன் கண்களே தன்னை ஏமாற்றுகின்றனவோ என்றுக.ட நினைத்துவிட்டான். பலமுறை பார்க்கிறான். கண்ணால் கண்டதை மனம் நம்ப மறுக்கிறது! இந்த இக்கட்டைக் கவிஞன் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறான். 'செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்' (வாலி வதைப்படலம்-79) என்பது கம்பன் வாக்கு. கண்களால் கண்டான்' என்றாலே போதுமே. தெரியக் கண்டான் என்று வேறு கூற வேண்டுமா? ஆம். மனம் முதலில் ஏற்க மறுத்து இறுதியில் வேறு வழி இல்லாமல் ஏற்பதைத்தான் இவ்வாறு கவிஞன் பாடிக் காட்டுகிறான். கவிஞன் கருத்தை அறியக் கண்களால்