பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 + கம்பன் - புதிய பார்வை கடவுள் வாழ்த்து கம்பன் வடமொழி இராம கதையைத் தழுவித் தமிழில் முதனுரலாகவே இராமாயணத்தை ஆக்கினான் என்று முன்னர்க் கூறப்பெற்றது. இந்த அடிப்படையில் அவனுடைய நூலில் நுழைந்தால் பாயிரம் என்ற தலைப்பில் கடவுள் வாழ்த்து என்ற உள்தலைப்பில் மூன்று பாடல்களும், அவையடக்கம் என்ற உள்தலைப்பில் ஆறு பாடல்களும், நூல் வரலாறு என்ற உள் தலைப்பில் ஒரு பாடலும், அடுத்து ஒரு பாடலும் இருக்கக் காண்கிறோம். இத் தலைப்புகளும் உள்தலைப்புகளும் உறுதியாகக் கவிஞன் தந்திருக்க முடியாது. அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பிற்காலத்தில் நல்லறிஞர் யாரோ தந்திருக்க வேண்டும். (இங்குத் தரப்பெறும் பாடல்கள் சென்னைக் கம்பன் கழகப் பதிப்பில் உள்ளபடி அமைந்தவை) கடவுள் வணக்கம் பாடுகின்ற மரபு சங்க காலத்திலிருந்தே இருந்து வருகிறதாகலின் இப்பகுதி மூன்று பாடல்களையும் ஏற்பதில் தவறில்லை. மேலும் இந்த மூன்று பாடல்களுமே அவனுடைய பார காவியத்தின் அடித்தளம் என்பதைப் பின்னர்க் காணலாம். எனவே இதனை இப்போதைக்கு விட்டுவிட்டு மேலே செல்லலாம். அடுத்து, அவையடக்கம் என்ற தலைப்பில் உள்ள ஆறு பாடல்களும் சிந்திக்க வேண்டியவை. இந்த ஆறு பாடல்களும் கவிதை நயம் நிறைந்து காணப்படுகின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால், அவையடக்கம் ஒரு நூலின் முகப்பில் இருத்தல் வேண்டும் என்ற கருத்து எப்பொழுது தோன்றிற்று? கம்பன் தோன்றிய 9ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என் உறுதியாக நாம் அறியும் காப்பியங்கள் மூன்று, அவற்றுள் சிலம்பும், மணிமேகலையும் முழுவதுமாகக் கிடைத்துள்ளன. மூன்றாவதான பெருங்கதை தலையும் வாலும் இல்லாமல்