பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 373 கண்டான்' என்றும், தெரியக் கண்டான்' என்றும், பிரித்துக் கூட்டிப் பொருள் காண்டல் வேண்டும். இராமனைப் பற்றி வாலி என்ன என்ன நினைத் திருந்தான் என்பதை, இப்பொழுது நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். ஒன்று. தனக்குக் கிடைத்த அரசைத் துச்சம் என நினைத்துத் தம்பிக்கு வழங்கியவன். இரண்டு. அத்தகையவன் வந்த இடத்தில் அண்ணன் தம்பியின் சண்டையில் தலையிட மாட்டான். மூன்று: தனக்கும் அவனுக்கும் எவ்விதப் பகையும் இன்மையால், தன்னிடம் போர் தொடுக்கமாட்டான். நான்கு: சுத்த வீரனாகிய இராமன் நேர் நின்று பொருவானே தவிர மறைந்து நின்று அம்பு எய்யக் கனவிலும் கருதமாட்டான். இராமனிடம் உறுதியாக இருக்கும் என்று வாலி நம்பியிருந்த இந்த நான்கு பண்புகளும், இவற்றால் தோன்றிய விழுப்பொருள்களும், இப்பொழுது நொறுங்கி விட்டன. கவிஞன் தந்த திறவுகோல் இதனால்தான், இராமன் தன் எதிரே வந்தவுடன், வாலி அவனை ஏசத் தொடங்குகிறான். இராமன் அவன் கண் எதிர் வந்து தந்த காட்சியைக் கவிஞன் வேறு ஒரு காரணத்திற்காக விரிவாகக் கூறுகிறான். கண் உற்றான் வாலி, நீலக் கார்முகில் கமலம் பூத்து, மண் உற்று, வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை; புண் உற்றது அனைய சோளி, பொறியொடும் பொடிப்ப நோக்கி, 'எண் உற்றாய்! என்செய்தாய்! என்று ஏசுவான் இயம்பல் உற்றான். (வாலி வதைப் படலம்-83)