பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 375 இந்தச் சிந்தனை ஒடிய முறையைத்தான் கவிஞன் நோக்கி என்ற சொல்லால் குறிக்கிறான். ஏன் இவ்வாறு ஒரே பாடலில், இந்த முரண்பாட்டைக் கவிஞன் கூற வேண்டும்? பின்னர் வாலியின் மனமாற்றமாகிய பூட்டின் திறவு கோலாக அமைந்துள்ளது இந்தப் பாடல்தான். காட்சியும் நோக்கமும் ஒருவனுடைய வடிவில் ஈடுபாடும், அவன் செயலில் சினமும், உண்டாவது இயற்கையே. இந்த முரண்பாடு தோன்றினால் இறுதியில் இவை இரண்டில் ஒன்று வெற்றி பெறும். ஒன்று, அந்த ஈடுபாடு மிகுந்து சினம் தணிந்துவிடும். இன்றேல், சினம் மேலோங்கி ஈடுபாட்டை அழித்துவிடும். ஒன்று மட்டும் உறுதியானது. வாலியைப் பொறுத்தமட்டில் கண்ணிற் கண்ட வடிவில் ஈடுபாடும், கருத்தில் நோக்கியதால் சினமும் தோன்றியது உண்மை. இந்த வினாடி, கண்ணுக்கும் கருத்துக்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தில், அவன் ஈடுபாட்டை மீதுTர்ந்து சினம் வெற்றி பெற்றுவிட்டது. மற்றோர் இலக்கியத்தில் இதேபோன்ற ஒரு சூழ்நிலையை, மற்றோர் இலக் கியத்திலும் காணலாம். நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணத்தில் கிழவேதியன் வடிவில் இறைவன் வருகிறான். 'உனக்கும் எனக்குமிடையே பெரிய வழக்கு ஒன்று உண்டு; அதைத் தீர்த்தால் ஒழியத் திருமணத்தை நடத்த ஒட்டேன்' என்றான் கிழவேதியன். வழக்கு என்ன என்று கேட்டவுடன் இந்த ஆரூரனும் இவன் மரபுளோரும் எனக்கு அடிமை", என்று வாதிட்டான். அதிசயமான இந்த வழக்கில் பிரதிவாதி என நிற்பவர், திருமண மாப்பிள்ளை யான நம்பியாரூரர். கிழவரைக் கண்ட மாத்திரத்தில், ஆரூரருக்கு அவர் பால் எல்லையில்லாத ஈடுபாடு