பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 கம்பன் - புதிய பார்வை ஏற்படுகிறது. ஆனால் அந்தக் கிழவன் பேசும் வார்த்தைகள் எல்லையற்ற கோபத்தை உண்டாக்குகின்றன. இந்த முரண்நிலையைக் கூறவந்த சேக்கிழார் பெருமான் சற்று வெளிப்படையாகவே இதனைக் கூறுகிறார். கண்டது ஓர் வடிவாய் உள்ளம், காதல் செய்து உருகா நிற்கும் கொண்டது ஒர் பித்தவார்த்தை கோபமும் உடனே ஆக்கும். - (தடுத்தாட் கொண்ட புராணம்-42) பார்த்த வடிவில் ஈடுபாடும், செயலில் கோபமும் வருதல் உண்டு என்பதைக் காட்டவே இந்த எடுத்துக் காட்டு. இதன் விளைவு என்ன தெரியுமா? கோபம் முதலில் வெற்றி பெறும்; அதற்குரிய ஏச்சு நடைபெறும் போதே கூடக் கண்ணிற் கண்ட காட்சி மனத்தினுட் சென்று மனமாற்றத்தை உண்டாக்கிவிடும். - ஏச்சும், பேச்சும் இப்பொழுது மறுபடியும் வாலியிடம் சென்றால், கம்பநாடன், ஏன் 'கண்ணுற்றான்' என்று தொடங்கி, இறுதியில், நோக்கி ஏசுவான் இயம்பலுற்றான்' என்று முடிக்கிறான் என்பதை அறிந்துகொள்ள முடியும். பின்னர், அந்த வாலியே அவ்வளவு கோபத்திலுங்கூட, கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் ஒவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய்! உடைமை அன்றோ? (வாலி வதைப் படலம்-86) என்று விளித்துப் பேசுகிறான் என்றால், அந்த வடிவழகில் வாலி எவ்வளவு தூரம் சிக்கித் தவிக்கிறான் என்பது