பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அ. ச. ஞானசம்பந்தன் + 377 விளங்கும். இது கருதித்தான் போலும் வியாக்யான கர்த்தாவுங்கூட, ஒருநாள் கண்டதால் அந்த வடிவ அழகு படுத்தும் பாடு இது ஆயிற்றிரே என்று கூறிப் போனார். இந்த அழகில் ஈடுபட்டான் வாலி என்பதைக் குறிப்பால் கூறவந்த கவிஞன் 'கண்ணுற்றான்' என்று கூறிப் பாடலைத் தொடங்குகிறான். இதனை அடுத்து இராமன் செய்த செயலால் கோபமும் நாணமும் ஒருங்கே கொண்டமையின், ஏசத் தொடங்குகிறான் என்று முடிக்கிறான். ஏசத் தொடங்கிய வாலி, ஒரேயடியாக ஏசிவிடவும் இல்லை. எள்ளி நகையாடல், ஏசல், இரக்கப்பட்டு மொழிதல் முதலிய பல்வேறு வழகளில் பேசுகிறான். நீ பரதனுக்கு அண்ணனாகப் பிறந்தாயே!', 'தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை, வலியவர் மெலிவு செய்தால் புகழன்றி வசையும் உண்டோ? என்பன போன்றவை எள்ளல் குறிப்பில் எழுந்தவை. இலங்கை வேந்தன் முறையல செய்தான் என்று முனிதியோ?-முனிவிலாதாய்', 'வாலியைப் படுத்தாயலை, அறவேலியைப் படுத்தாய் விறல் வீரனே! என்பன போன்றவை ஏசல். வீரம் அன்று; விதி அன்று; நின் மண்ணினுக்கு என்னுடல் பாரமன்று; பகை அன்று', 'ஒளித்து நின்று, வரிசிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் தருமமோ? பிறிது ஒன்று ஆமோ? என்பன போன்றவை இரக்கத்திற் பிறந்தவை. இந்த ஏசல்கள் மாறிமாறி மின்னல் வேகத்தில் வந்தன. இராமன் ஒன்றும் விடை கூறக்கூடிய நிலையில் இல்லை. ஒருவேளை அவனுடைய முகமண்டலமே இரக்கத்திற்கு உரியதாக இருந்திருக்கும் போலும்! வாலி செய்த தவறுகள் யாவை என்று இராமன் அடுக்கிக் கூறவும், வாலி ஒரே வாக்கியத்தில் அவற்றை அடித்து விடுகிறான். இராமா! நீ பேசும் அறம், பிறன்மனை நயவாமை என்ற விழுப்பொருள்கள், உன்னுடைய மானிட சமுதா