பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 379 கவிகுலத்து அரசும் அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான்; அவியுறு மனத்தன் ஆகி, 'அறத்திறன் அழியச் செய்யான் புவியுடை அண்ணல் என்பது எண்ணினன் பொருந்தி, முன்னே, செவியுறு கேள்விச் செல்வன் சென்னியின் இறைஞ்சி, சொன்னான். (வாலி வதைப் படலம்-120) சற்று நின்று நிதானித்தால், ஒர் உண்மை விளங்காமற் போகாது. வாலி திடீரென்று முற்றிலும் மனம் மாறிவிட்டான். இராமன் காட்டிய ஏதுக்களால் மனம் மாறாதவன், இலக்குவன் கட்டுரையால் மாறினான் என்பது சரியன்று. ஆனாலும், மாறினான் என்பது உண்மை. அப்படியானால், மாறினமைக்கு உரிய காரணம் யாதாக இருக்கும் என ஆராய வேண்டும். இங்கேதான் கவிஞன் பற்பல விழுப்பொருள்களை நேரிடையாகவும், குறிப்பாகவும் புகுத்திக் காட்டுகிறான். வாலி மனம் மாறவேண்டுமாயின், அவன் இதுவரை கொண்டிருந்த பார்வையும், எண்ணங்களும், மாறி இருக்க வேண்டும். நிகழ்ச்சிகள் நிகழ்ந்துவிட்டமையின் அவற்றில் மாற்றம் என்பது இயலாத காரியம். அப்படியானால் இந்த நிகழ்ச்சியை இதுவரை வாலி கண்ட விதம் வேறு; இப்பொழுது காணும் விதம் வேறு. ஒருவன் அடிபட்டு வீழ்ந்து இறந்துவிட்டான் என்று வைத்துக் கொள்வோம். பிறரிடம் பட்ட அடியால் இறந்துவிட்டான் என்று கருதினால், அந்தப் பிறர்மேல் எல்லையற்ற சினம் கொள்கிறோம். அதற்கு மாறாகப் பிணத்தை அறுத்துக் காண்பவர், பட்ட அடியால் இறக்கவில்லை. இருதயக் கோளாறால் இறந்துவிட்டார் என்று சான்று கூறிவிட்ட பிறகு, அடித்தவரிடம் நாம் வெறுப்பும், சினமும், கொள்ளமாட்டோம் அல்லவா? இதே உவமையைச் சற்று