பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 381 நான்காவது நிலையில், அதே இராமன் அடிபட்ட வாலியிடம் சில வார்த்தைகள் கூறினான். தான் அவனைக் கொன்றதற்குச் சமாதானமாக இராமன் இவற்றைக் கூறினாலும், இதிலுள்ள தத்துவம் வாலியின் அகமனத்துள் புகுந்து வேலை செய்யத் தொடங்கிற்று. "பொறியின் யாக்கையதோ? புலன் நோக்கிய அறிவின் மேலது அன்றோ, அறத்து ஆறுதான்? நெறியும், நீர்மையும், நேரிது உணர்ந்த நீ பெறுதியோ, பிழை உற்றுறு பெற்றிதான்? நன்று, தீது என்று இயல் தெரி நல் அறிவு இன்றி வாழ்வது அன்றோ, விலங்கின் இயல்? நின்ற நல்நெறி, நீ அறியா நெறி ஒன்றும் இன்மை, உன் வாய்மை உணர்த்துமால், தக்க இன்ன, தகாதன இன்ன, என்று ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள மக்களும் விலங்கே, மனுவின் நெறி புக்கவேல், அவ்விலங்கும் புத்தேளிரே' (வாலி வதைப் படலம்-116, 119, 129) நடைபெற்ற உரையாடற் போட்டியை மறந்துவிட்டு இச்சொற்களைப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். இராமன் வாலிக்கு உபதேசஞ் செய்த பகுதியாகும் இது. தன் செய்கைக்குச் சமாதானங் கூறும் முறையில் இராமன் இதனைக் கூறினாலும், உண்மையில் இந்த உபதேசம் வாலியின் அகமனத்தில் சென்று தைக்க வேண்டும் என்று கருதிய பரம்பொருள், இராகவன் மூலம் பேசினான் என்று நினைப்பதில் தவறு இல்லை. உண்மைக் காரணம் உண்மையிலேயே இச்சொற்கள், வாலியினுடைய வெறுப்புணர்ச்சி நிறைந்த புறமணத்தை ஊடுருவிச் சென்று அவனுடைய அகமனத்தில் ஆழப் பதிந்துவிட்டன. அன்ன