பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 + கம்பன் - புதிய பார்வை கட்டுரை கருத்தில் கொண்டான்' என்று கவிஞன் கூறுவது இதனையே ஆம். இச்சொற்கள் அகமனத்தில் சென்று பதிந்தவுடன், வாலி இதுவரை கொண்டிருந்த விழுப் பொருள்கள், முற்றிலும் மாறத் தொடங்கிவிட்டன. தக்க இன்ன, தகாத இன்ன என்று ஒக்க உன்ன வேண்டும் என்றால் தக்கவை, தகாதவை என்பவைகட ஒருவன் மனவளர்ச்சிக்கு ஏற்ப மாறுபடும்; சூழ்நிலைக்கு ஏற்பக்கூட மாறுபடும். உதாரணமாக, ஒருவனுக்குத் தந்தை எனப்படுபவன் கடவுளுக்குச் சமமானவன். தந்தையை ஒருவன் தெய்வமாக மதித்துப் போற்றி வழிபட வேண்டும். ஆனால் அந்த ஒருவன் துறவியாக மாறிவிட்டால், இதே தந்தை, அத்துறவியின் காலில் விழுந்து வணங்க வேண்டும். விழுப்பொருள் சூழ்நிலையால் மாறிவிடக் காண்கிறோம். பகை பாராட்டுபவனுடன் மட்டுமே போர் புரிய வேண்டும். காரணமில்லாமல் போர் புரியக்கூடாது. நேரே நின்றுதான் போர் புரிய வேண்டும் என்ற இவை எல்லாம் விழுப்பொருள்கள்தான். எப்பொழுது? ஒரு நிலையில் இருக்கும் பொழுது, இவை விழுப்பொருள்கள். சாதாரண விருப்பு வெறுப்புகள் நிறைந்த சராசரி மனிதனுக்கு, இந்த உலக வாழ்கையில் ஈடுபட்டிருப்பவனுக்கு, இவை எல்லாம் சிறந்த விழுப்பொருள்கள் என்பதை மறுக்க முடியாது. வாலியின் புதிய பார்வை ஆனால், பகை என்ற ஒன்று உண்டோ ? யார் பகைவர்? யாருக்கு யார் பகை? உயிர்கள் மற்ற உயிர் களுடன் பகைப்பது முறையா? காரணம் இல்லாமல் போர் புரியக்கூடாது என்றால் காரணம் இருந்தால் மட்டும் போர் புரியலாமா? மாற்சரியமே கூடாது என்றபின், பகைவர், உறவினர் என்று யாருமே இருக்க முடியாதே! அப்படி இருக்க நேர் நின்று போரிடுதல் என்பவை