பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 21 இடைப்பகுதி மட்டிலும் இன்று கிடைத்துள்ளது. சிலம்பு, மேகலை ஆகிய இரண்டும் தொடங்கு முறையில் ஒரளவு மாறுபட்டுள்ளன. சிலம்பு மங்கல வாழ்த்து என்ற பெயருடன் கதிரவன், திங்கள், மழை என்ற இயற்கை வாழ்த்துடன் தொடங்குகிறது. மணிமேகலை அதுவும் இல்லாமல் சம்பாபதி என்ற தெய்வம் பற்றிப் பேசுகிறது. சிலம்பு சைன காப்பியமாகவும், மேகலை பெளத்த காப்பியமாகவும் இருத்தலினால் அவை இரண்டும் கடவுள் வாழ்த்து என்ற ஒன்றைக் கூறவில்லை. காரணம் இவ்விரு சமயங்களும் கடவுள் பற்றிப் பேசும் கொள்கை உடையனவல்ல. அவையடக்கம் புதிது ஆனால் இந்த இரண்டு காப்பியங்களும் பதிகம் என்ற பெயரில் சில கருத்துகளைப் பேசுகின்றன. அவையடக்கம் என்று கருதக்கூடிய பகுதி எதுவும் இவற்றில் இல்லை. அதற்குப் பதிலாகப் பதிகம் என்ற பகுதி நூலின் உள்ளே உறையும் பெரும் பகுதிகளின் பெயர்களை வரிசைப் படுத்திக் கூறி, இப் பகுதிகளைக் கொண்டே இந்நூல் செய்யப் பெற்றுள்ளது என்று கூறும். கம்பனுக்குப் பிற்பட்டுத் தோன்றிய சீவகசிந்தாமணியும் இந்த முறையைப் பின்பற்றிச் செல்கிறது. ஆனால் முன் இரண்டு நூல்களிலும் இல்லாத அவையடக்கம் சிந்தாமணியில் இடம் பெறுகிறது. எனவே அவையடக்கம் என்ற புதுப்பகுதியைத் தமிழ் இலக்கியத்தில் புதிதாகப் புகுத்தியவன் கம்பனே என்று கருத இடம் தரும் முறையில் இராமாயணம் அமைந்துள்ளது. செருகு கவிகள் பிற்காலத்தில் நிரம்ப உள்ளே நுழைந்துள்ளன என்றாலும், இந்த அவையடக்கப் பகுதியைக் கவிஞனே பாடி இருத்தல் வேண்டும் என்று கருதுவதில் தவறு இல்லை. அதில் ஒரு சிறப்பான கவிதையைக் கண்டால், கவிஞன் தான் எடுத்துக்கொண்ட பொருளினிடத்துப் பரிவும் (Sympathy)