பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 383 அர்த்தமற்ற வெற்றுரைகள் அல்லவா? விருப்பு வெறுப்பு இல்லாமல், சமதிருஷ்டியுடன் இருப்பவன் ஒருவனைக் கொல்கிறான் என்றால், அது அறுவை மருத்துவன் செய்யும் அறுவை போன்றதல்லவா? அறுவை மருத்துவம் செய்யும்பொழுது நோயாளி இறந்துவிட்டான் என்றால் யாரேனும் மருத்துவனைக் குறை கூறுவார்களா ? இம்மாதிரியான கோணத்தில் நின்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை வாலி ஆயத் தொடங்கிவிட்டான். அதற்குரிய மனப்பக்குவத்தை அவன் அப்பொழுது பெற்றுவிட்டான். அந்தப் பக்குவம் அவனுக்கு வர, அடுத்து கொடுக்கப் பெற்றுள்ளவை துணை புரிந்தன. () இராமனைக் காணுமுன் அவன்மாட்டு, வாலி கொண்டிருந்த பெருமதிப்பு. (2) மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத் தைக் கண்களில் தெரியக் கண்டது. (3) கமலம் பூத்த கார்முகிலைக் கண்ணுற்றது. (4) இராமன் சொற்களாலும், அம்பாலும் செய்த உபதேசம், விளக்கம் பெற்ற நிலையில் வாலி தன் இறப்புக்குக் காரணம் இராமன் அம்பு அன்று என்று நினைத்து, அதை வெளிப்படையாகவும் கூறுகிறான். 'ஏவுகூர் வாளியால் எய்து, நாய் அடியனேன் ஆவிபோம் வேலைவாய், அறிவுதந்து அருளினாய்; (வாலி வதைப் படலம்-129) என்று கூறுவதைக் காண வேண்டும். எய்து என்ற வினைஎச்சம் தந்து அருளினாய் என்ற வினை கொண்டு முடிகிறது. எய்து ஆவிபோக்கி என்று அவன் கூறவில்லை. 'ஆவிபோம் என்று தன் வினையால் கூறுவதால், தன்