பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 கம்பன் - புதிய பார்வை உயிர் போவதற்கு இராமன் காரணமோ, பொறுப்போ அல்லன் என்பதை நன்கு விளக்கிவிடுகிறான். எனவே, அம்பின் மூலம் அஞ்ஞானத்தை அகற்றி, உண்மை அறிவைத் தந்தாய் என்றுதான் கூறுகிறானே தவிர, தன் உயிர் போக, அம்பு காரணம் என்று கூறவில்லை. இந்த நான்கின் எதிரே, இராமன் மறைந்து நின்று அம்பு எய்ததும், நியாய, அநியாயங்களும், போர் அறம் எனக் கூறப்பெற்ற சட்டதிட்டங்களும், பொடி சூரணமாகிவிட்டன. இந்த நான்கையும் சிந்திக்கு முன்னர் இவை பெரிய விழுப்பொருள்கள். இந்த நான்கையும் சிந்தித்த பிறகு பிற அனைத்தும் பிள்ளை விளையாட்டு. எனவே, அவற்றிற்கு எவ்வித மதிப்பும் தர வாலி தயாராக இல்லை. ஒரு கோடு எவ்வளவு பெரியது என்று நினைத்தாலும், அதனையடுத்து மற்றொன்று, அதைவிட நீளமாகப் போட்டுவிட்ட பிறகு, பழைய கோடு மதிப்பை இழந்துவிடுதல் போல, இப்புதிய பார்வையில் பழைய விழுப்பொருள்கள் சிறப்பு இழந்துவிடுகின்றன. இப்புதிய பார்வை வருமுன்னர்; அந்த விழுப்பொருள்கள் மிகப் பெரியவை மிக உயர்ந்தவை. புதிய பார்வை வந்துவிட்ட பிறகு, அவ்விழுப் பொருள்கள் மிக அற்பமானவையாக, மிகச் சிறியனவாக ஆகிவிட்டன. இத்தனையும் மனத்துட் கொண்டு வாலியினுடைய மாற்றத்தைக் கவிஞன் கூற முற்படுகிறான். ஆம்! வாலி முற்றிலும் மாறிவிட்டான். அதாவது, வாலி அதுவரை கொண்டிருந்த விழுப்பொருள்கள் அனைத்தும் மாறிவிட்டன. எனவே, சிறியவையாக மாறிவிட்ட அந்தப் பழைய விழுப்பொருள்களை இப்பொழுது வாலி நினைக்கக்கூட விரும்பவில்லை என்கிறான் கவிஞன், சிறியன சிந்தியாதான் என்ற அடைமொழியை வாலிக்குத் தருகிறான் கவிஞன். சிறியன சிந்தியாதான் என்ற ஒப்பற்ற அடைமொழிக்கு இவ்வாறு பொருள் கொண்டால் ஒழிய வேறு வகையில் அமைதி கூற முடியாது. காரணம் இல்லாமல் இப்படி ஒரு