பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 385 அடைமொழியைக் கம்பன் தரமாட்டான். இலக்கணம் இதனைக் கருத்துடை அடை' என்று கூறும். வாலியின் விழுப்பொருள்கள் மாறிவிட்டன என்பதை எவ்வாறு அறிய முடிகிறது? எந்த இராமனைப் பரதன் முன் தோன்றினாயே! என்று ஏசினானோ, அந்த இராமனை நோக்கி இதோ பேசுகிறான்; "தாய் என உயிர்க்கு நல்கி, தருமமும், தகவும், சால்பும் நீ என நின்ற நம்பி! நெறியினின் நோக்கும் நேர்மை நாய் என நின்ற எம்பால், நவையற உணரலாமே? தீயன பொறுத்தி!' என்றான்-சிறியன சிந்தியாதான். (வாலி வதைப் படலம்-127) இராமனைத் தாய் என்று கூறுவதோடு அமையாமல், தருமம், தகவு, சால்பு என்பவற்றின் வடிவம் என்றும் கூறுகிறான். யார் வயிற்றைக் கிழிக்கிறார்கள் என்று அறிந்துகொள் ளாமல் கிழிக்கப்படும் செயலை மட்டும் பார்த்த ஒருவன், இது கொலை என்று கூறுகிறான். சில வினாடிகளில் கிழிப்பவர் மருத்துவர் என்று தெரிந்தவுடன், அன்புள்ளம் கொண்ட மருத்துவர் என்று பேசுகிறான். இரண்டிலும் நடைபெறுவது அறுவைதான் என்றாலும், இரண்டிற்கும் இடையே விழுப்பொருள் மாறிவிடுகிறது. இதே நிலையில் வாலி இருந்தமையின், விழுப்பொருளில் மாற்றங் கண்ட பிறகு, சிறியன சிந்தியாமல் நடைபெற்ற நிகழ்ச்சியை நோக்கினான்; உடன் அதன் சிறப்புத் தெரியத் தொடங் கிற்று. இராமனைத் தாய் என்றும் சால்பு ஊன்றிய தூண் என்றும் பேசத் தொடங்கிவிடுகிறான். முன்னர் விழுப் பொருள்களாகக் காட்சியளித்தவை இப்பொழுது அற்பமானவை ஆகத் தோன்றத் தொடங்கிவிட்டன. அவற்றைச் சிறியன என்று கூறுகிறான் கவிஞன். வாலியைச் சிறியன சிந்தியாதான் என்று கூறுவதன்