பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 கம்பன் - புதிய பார்வை நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தவுடன், தான் கொண்டிருந்த பழைய விழுப்பொருள்களை மாற்றிக் கொண்டான் வாலி. அதனால் உடனடியாகத் தேவர் கட்கும் கிட்டாத வீடுபேற்றைப் பெற்றுவிட்டான் என்கிறான் கவிஞன். மாற்றாத உறுதி ஆனால் இதே கம்பன் மற்றொரு பாத்திரத்தின் மூலம் என்ன நிகழ்ந்தாலும் தான் கொண்ட விழுப்பொருள்களை மாற்றிக் கொள்வதில்லை என்ற உறுதியுடன் உயிரை விடுகின்ற நிகழ்ச்சியையும் காட்டிச் செல்கிறான். போர்க்களத்தில் வந்து நிற்கும் கும்பகருணனைக் கண்ட இராமனே வியப்பெய்துகிறான். அவனுடைய நேர்மையைப் பற்றி வீடணன் கூறி இந்த நல்லவனைக் கொன்று ஒரு பயனும் இல்லை. அறிவுரை கூறி இவனை அழைத்து வருகிறேன், என்று இராமனிடம் அனுமதி பெற்றுக் கும்பனிடம் வருகிறேன். அவனைக் கண்ட கும்பகருணன் வியப்பும் வருத்தமும் ஒருங்கே எய்திய வனாய், ஏன் நீ என்னிடம் வந்தாய்? இறக்கும் தருவாயில் இருக்கும் எங்களை நாடி வருவது நியாயமா!' என்ற கருத்தில், கவிஞரின் அறிவு மிக்காய்! காலன்வாய்க் களிக்கின்றேம்பால் நவை.உற வந்தது என் நீ? அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ? (கும்பகர்ணன் வதைப் படலம்-13) என்று பேசுகிறான். வீடணன் பக்குவமாகக் கும்பனிடம் பேசத் தொடங்கி 'நீ இதுவரை உன் வாழ்நாளை வீணாளாக உறங்கியே கழித்துவிட்டாய்! வேதங்களைக் கற்ற நீ, இப்பிறவி நோயிலிருந்து விடுபட வேண்டாமா?