பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 389 இராமனிடம் சரணம் புகுந்துவிட்டால் இலங்கை அரசுடன் வீட்டரசும் உனக்கு நல்குவான் என்று பல்வேறு காரணங்களைக் காட்டிப் பேசினான். வீடணனிடம் எல்லையில்லாத அன்பு பூண்டவன் கும்ப கருணன். ஆனால் அண்ணன், தம்பியராகிய இவர்கள் இருவருக்கும் விழுப்பொருள்கள் வேறு வேறு. இராமனிடம் சேர்வது, மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும் உருள் உறு சகட வாழ்க்கை ஒழித்து வீடளிக்கும்... (கும்பகருணன் வதைப் படலம்-139) என்று கருதுபவன் வீடணன். வீடணனைப் போலவே, கல்வி, கேள்வி ஞானங்களில் நிறைந்தவன்தான் கும்ப கருணனும் என்றாலும் என்ன? இருவருடைய விழுப் பொருள்களும் இரு வேறு துருவங்களாக அமைந்து விட்டன. இரு துருவங்களாக விழுப்பொருள்கள் இருப்பினும், ஒருவர் மாட்டு ஒருவர் கொள்ளும் அன்பு இதனால் குறைய வேண்டியதில்லை என்பதை எடுத்துக் காட்டவே, கவிஞன் இந்தக் காட்சியை அமைத்துக் காட்டுகிறான். அண்ணனாகிய கும்பனைத் தன்னுடன் வருமாறு வேண்டிய வீடணன், தரையில் வீழ்ந்து அண்ணனை வணங்குகிறான். வணங்கும் தம்பியை எடுத்து, மார்புறப் புல்லிக் கண்ணிர் சோரப் பேசுகிறான் கும்பகருணன். தன் முடிவையும் தமையன் முடிவையும் மிக நன்றாக அறிந்திருந்தான் கும்பன், என்றாலும் என்ன? வீடணன், இம்மையில் இலங்கை அரசும் மறுமையில் வீடும் கிடைக்கும் என்று கூறினதால், தன் விழுப்பொருளை