பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 + கம்பன் - புதிய பார்வை மாற்றிக்கொள்ள இசைந்தானா கும்பன்? அப்படியானால் அவனுடைய விழுப்பொருள்தான் என்ன? ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது. தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன்? (யமனிடம்) துணை இன்றி (அண்ணன்) சேரல் நன்றோ? (கும்பகர்ணன் வதைப் படலம்-158, 15) -இவ்வாறு அண்ணன்பால் தன் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தினான். இனித் தன் வீரத்தின்பால் அவன் கொண்ட உறுதி வருமாறு: கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன்! (100) பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென்; (16) கறங்கு எனத் திரிவென். (102) ஒருவரும் திரிய ஒட்டேன், உயிர் சுமந்து உலகில். (168) இவைதான் கும்பகருணனுடைய விழுப்பொருள்கள். இவ்வாறு கூறுவதால், முட்டாள்தனத்துடன் பகைவனின் வன்மை அறியாமல், தன்னைப் பற்றி உயர்வாக நினைத் துள்ளானே, என்று யாரும் நினைய வேண்டியதில்லை. தன் முடிவு என்ன? இராவணன் முடிவு என்ன? இலங்கை அரக்கர் முடிவு யாது? என்பவற்றை, மிக நன்றாக அறிந்த ஒருவன், இலங்கையில் உண்டு என்றால், அவன் கும்ப கருணன் தான். என்றாலும் என்ன ? அவன் கொண்டிருந்த விழுப்பொருள்களை விட்டுக் கொடுக்கவோ, வேறு விழுப்பொருள்களை ஏற்றுக் கொள்ளவோ அவன் தயாராக இல்லை. தம்பியாகிய வீடணனுக்கு, இராமனிடம் சரணமாதல்தான் தக்கது என்பதையும், தான் போர் புரிந்து மரணமடைவதுதான் புகழ் என்பதையும் நன்கு அறிந் தவனாகலின், அவரவர் விழுப்பொருள்களை அவரவர் காப்பதே முறை என்று கருதினான். எனவே களத்தில் வீடணனிடம் பேசும்போது,