பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 + கம்பன் - புதிய பார்வை விழுப்பொருள்கள் என்று, ஒன்றையும் வைத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாக ஆகிவிடும். ஒருவன் தான் கொண்ட விழுப்பொருள்கட் காகத் தன் உயிரையும் விடத் தயாராக இருத்தல் வேண்டும். இராமனைப் பரம்பொருளோ என்று நினைக்கும் இராவணன், "யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை பேரேன், நின்றேன் வென்றி முடிப்பென்! புகழ் பெற்றேன்’ (இராவணன் வதைப் படலம்-130) என்று கூறுகையில், அவனுடைய விழுப்பொருள்கள் எவை என்பதை, அறிய முடிகிறது. கம்பநாடன் காப்பியத்தில் உள்ள ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு விழுப் பொருளைக் கொண்டு விளங்குதலைக் காண முடிகிறது. வருங்கால மனித குலத்துக்கு ஒர் அறவுரை கூறுவதுபோல, வாழும் ஒவ்வொருவனுக்கும் ஒரு விழுப்பொருள் வேண்டும் என்பதைக் கவிஞன் காட்டுகிறான்.