பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 + கம்பன் - புதிய பார்வை 1 išstu4th (Devotion)#GramsT Lcp;#35 Gokuxg:Lò (Losing selfin the subject) கொண்டுள்ளான் என்பதை அறிய முடிகிறது. முத்தமிழ்த் துறையின் முறை போகிய உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென் பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும், பன்னப்படுபவோ? (பாயிரம்-3) பித்தர் தம்மை மறந்தவர்கள்; பத்தர் தம்மை சர்வ பரித்தியாகம் செய்தவர்கள், பேதையர் தம் செய்கையின் பலாபலன்களை அறியாதவர். இம் மூவகையினருடைய செயல்கள் அறிவுக்கு அப்பாற்பட்ட உணர்வின் அடிப் படையில் நிகழ்பவை. ஆகலின் அறிவின் துணைகொண்டு இவர்கள் செயலை ஆராய்வதால் பயனில்லை என்று கூறகிறான். இவ்வாறு கூறுவதில் ஒர் ஆழ்ந்த கருத்தும் அடங்கியுள்ளது. இந்த நாட்டில் தோன்றிய பெரியோர்கள் யாதானும் ஒர் அரிய செயலைச் செய்ய நேரிட்டால் அதனைத் தாம் செய்ததாக் நினைப்பதுமில்லை; கூறுவதும் இல்லை. அதன் எதிராக இறைவனே தம்மை ஆட்கொண்டு தம் மூலமாக அச் செயலை நிகழ்த்தினான் என்று நம்பினர்; கூறினர். திருவாய் மொழி அருளிச்செய்த நம்மாழ்வார் இக்கருத்தை அழகுபடக் கூறுகிறார். என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து வல் நெஞ்சத்து இரணியனை மார் விடந்த வாட்டாற்றான் 'நாலாயிரம்-3132) பண் ஆர் பாடல் இன் கவிகள் யான் ஆய்த் தன்னைத்தான்பாடி - - (நாலாயிரம்-3144) இரணியனை மார்பைப் பிளந்த திருவாட்டாற்றில் உறையும் திருமால் என் நெஞ்சினுள் இருந்து இந்த அழகிய