பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 25 அந்த மூவர் யார் என்று கூறிப் பிறகு அம்மூவருள் வான்மீகி முந்தியவர் என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இராமனுக்கு உபநயன விதிமுடித்துக் கல்வி கற்பித்து வளர்த்தவனே வசிட்டன் என்று கதை பேசுகிறது. ஜனகனிடம் இராம இலக்குவர்களை அழைத்துச் சென்று அறிமுகஞ் செய்துவைக்கும் விசுவாமித்திரன் இதனைக் கூறுகிறான். அவ்வாறு அவன் கூறுவதற்கும் ஒரு காரணம் உண்டு. தான் வளர்க்கும் பெண்ணை இராமனுக்கு மணம் செய்து கொடுக்க விரும்பும் ஜனகனுக்கு மருமகனாக வரப் போகிறவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவன் தந்தையாகிய தசரதனைப் பற்றி நன்கு தெரியும், 'அறுபதினாயிரம் மனைவியரை மணந்த ஒருவனுடைய மகன் எப்படி இருப்பான்ோ? இவனுக்கு எவ்வாறு தன் ஒரே மகளைத் தரமுடியும்?' என்ற எண்ணம் பெண்ணைப் பெற்றவன் மனத்தின் ஆழத்தில் இருக்கத்தானே செய்யும்? அவ்வாறு அவன் கருதினால் அதில் தவறு கூற ஒன்றும் இல்லை. எனவே இந்த ஐயத்தைப் போக்குபவன் போல, விசுவாமித்திரன் திறையோடும் அரசு இறைஞ்சும் செறிகழல் கால் தசர தனாம் பொறையோடும் தொடர்மனத்தான் புதல்வர் எனும் பெயரே காண் உறை ஒடு நெடுவேலாய்! உபநயன விதிமுடித்து மறை ஒதுவித்து, இவரை வளர்த்தானும் வசிட்டன் காண் - * : * . (குலமுறை-24) என்று பேசுகிறான். அப்படியானால் வசிட்டனுக்கு முன்னவனாக வான்மீகியைக் கூறுவது எவ்வாறு? மேலும், வடமொழியைத் தேவபாடை என்று கூறும் மரபு உண்டேனும், பின்னர் வடசொற்கலைக்கு எல்லை