பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 + கம்பன் - புதிய பார்வை தேர்ந்தான் (நகர் நீங்கு-130) என்று பேசும் கவிஞன், தேவபாடை என்று கூறுவானா என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இதைவிடப் புதுமை ஒன்றும் காணப்படுகிறது. அவையடக்கம் என்ற பெயரில் ஆறு பாடல்களைப் பாடிவிட்டான் என்றே வைத்துக் கொள்வோம். பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வமாகக் கவி மாட்சி தெரிக்கவே வையம் இவன் ஏன் பாடினான் என்று இகழ்ந்தாலும் அதுபற்றிக் கவலைப்படாமல், பாடினதாக அவையடக்கம் மூன்றாவது கவிதை தெரிவிக்கிறது. இதனுடன் கவிஞனின் அவையடக்கம் முடிந்ததாகத் தெரியவில்லை. இதனை அடுத்துள்ள ஆற்றுப் படலம் கடந்து, நாட்டுப் படலம் தொடங்கும்போது மறுபடியும் அவையடக்கம் என்ற பெயர் இல்லாமல் ஒரு கவிதை காணப்படுகிறது. வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் தீங்கவி, செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான் ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியல் உற்றேன் (நாட்டுப் படலம்-) மேலே அவையடக்கத்தின் மூன்றாவது பாடலில் கூறிய அதே கருத்தை மறுபடியும் ஆற்றுப் படலத்தின் முதலில் அமைக்க வேண்டிய இன்றியமையாமை எங்கே வந்தது? வான்மீகிபால் கொண்ட நன்றி உணர்ச்சி மிகுந்துவிட்டதால், படலந்தோறும், கடவுள் வாழ்த்துப் போல் வான்மீகி வணக்கம் கூறுகிறான் என்று கருதினால், அதற்கு ஏற்ற முறையில் நூலில் வேறு எங்கும் வான்மீகி பற்றிய பேச்சையே காணவில்லை. இதைவிட ஒரு வியப்பும் உள்ளது. அவன் (வான்மீகி புகழ்ந்த நாட்டை யான் மொழியலுற்றேன் என்று பாடல் கூறுகிறது. ஆனால் வான்மீகி நாடுபற்றிக் கூறியுள்ளது ஒரே ஒரு கவிதைதான். (பாலகாண்டம் சருக்கம் 5 பாடல் 2 மட்டும்) கம்பன்தான்