பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கம்பனுக்கு முன் கவிஞன் காலம் கம்பநாடன் திருவரங்கத்தில் தன் இராம காதையை கி. பி. 689 பிப்ரவரி மாதத்தில் அரங்கேற்றினான் என்று கூறும். எண்ணிய சகாத்தம் எண்ணுற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே, கம்ப நாடன், பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில் கண்ணிய அரங்கர் முன்னே கவிஅரங் கேற்றி னானே! (தனிச் செய்யுள்) -என்ற இப் பாடலின்படி சக ஆண்டு பங்குனி அத்தம் கூடிய நன்னாளில் திருவரங்கத்தில் தன் நூலை அரங்கேற்றினான் என்றால் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது தெளிவாகும். இதனை மறுத்து வேறு ஒரு தனிப்பாடலைக் காட்டிக் கம்பன் காலம் 12ஆம் நூற்றாண்டு என நிறுவ முனைந்தார் திரு வையாபுரிப் பிள்ளை. அவருடைய பிற ஆய்வுகளின்படி சிலப்பதிகார காலமே 6ஆம் நூற்றாண்டு என்ற முடிவுக்கு வருபவர். சிலம்பு 6ஆம் நூற்றாண்டு என்றால், கம்பரைப் பன்னிரண்டுக்குக் கொண்டு செல்லவேண்டிய இன்றி யமையாமை அவருக்கு ஏற்பட்டது. அந்த விவகாரத்தில்