பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 29 நுழையாமல் கம்பன் 9ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தான் என்று கொண்டு மேலே செல்லலாம். பாரம்பரியக் காவலன் திறனாய்வாளர் கருத்துப்படி எந்த ஒரு பெருங் கவிஞனும் திடீரென்று எந்த ஒரு சமுதாயத்திலும் தோன்றிவிட முடியாது. பெருங்கவிஞன் ஒருவன் தோன்றினான் என்றால், அவனுக்கு முன்னர் அவன் தோன்றிய மொழியில், நாகரிகத்தில், மக்கள் இடையில், ஒரு பாரம்பரியம் இருந்திருத்தல் வேண்டும் என்று கருதுகின்றனர். பெருங் கவிஞன் ஒவ்வொருவனும் தான் பிறந்த சமுதாயத்தில், மொழியில் உள்ள பாரம்பரியத்தில் ஊறித் திளைத்துத்தான் வெளிப்படுகிறான். இவ்வாறு கூறுவதனால் அக்கவிஞனிடம் தனித்தன்மை (Originality) இல்லாமல் போய்விடுமோ என்று யாருங் கருத வேண்டா. பழைமையின் சாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு கவிஞன் தன்னுடைய மனத்திலும், அகமனத்திலும் அந்தச் சாரத்தை நிறைத்துக் கொள்கிறான். இந்த நிறைவுடன் புதிதாக ஒன்றை அறிகிறான் என்றால் அந்தப் புதியதாக அறிகின்ற ஒன்றை, பழைய சாரத்தின் அடிப்படையில் கானும்பொழுது அக்கவிஞன் புதிய ஒரு காட்சியைக் காணுகிறான். அவன் கானுவதை அல்லது கேட்பதை ஏனையோரும் காணுகின்றனர் என்றாலும், அவர்களைப் பொறுத்தமட்டில் கவிஞன் கானும் காட்சியைக் காண முடியாது. பழமையில் ஊறித்திளைத்த அவன் காணும் காட்சியைப் பிறர் எவ்வாறு காண முடியும்? கம்பநாடன் இத்தமிழ் நாட்டில் 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றுவதற்கு முன்னர் இந்நாட்டின் நாகரிகம், பண்பாடு, இலக்கியம், அரசியல் என்பவை எவ்வாறு இருந்தன என்பதைச் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும்.