பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - கம்பன் - புதிய பார்வை கம்பனாரிடைப் புலமை உள்ளது கம்பன் பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளின் முன்னரே முற்றிலும் வளர்ச்சி அடைந்த மொழி, இலக்கியம், இலக்கணம் என்பவை இந்நாட்டில் தோன்றிவிட்டன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்ற நூல்கள் இன்றுகூட நாம் காணும் நிலையில் உள்ளன என்றால், கம்பன் காலத்திலும் இவை இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. சிலப்பதிகாரத்திற்கு உரையிட்ட அடியார்க்கு நல்லார் பட்டியல் தரும் நூல்கள் பல இன்று இல்லை. நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார முற்பகுதிக்கு உரையிட்டு அவற்றிற்கு மேற்கோளாகக் காட்டிய பாடல்கள் சில இன்று இல்லை என்றால், அவர்கள் காலத்தில் அவை இருந்தன என்பதுதானே பொருள். அவர்கள் காலத்தில்கூட இந்நூல்கள் இருந்தன என்றால், கம்பன் காலத்திலும் அவை இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்பது தெளிவு. இந்நூல்களையும், வடமொழியில் உள்ள நூல்களையும் கசடறக் கற்றுத் தேர்ந்தவன் கம்பன் என்பதை ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டு மக்கள் அறிந்தும் வெளிப்படையாகக் கூறியும் உள்ளனர். கல்வியிற் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்', 'கம்பனாரிடைப் புலமை உள்ளது என்பன போன்ற முதுமொழிகள் இக்கருத்துக்குச் சான்று பகரும். பக்தி இலக்கியத்திலும் ஈடுபாடு சங்கநூல்கள், அவற்றை அடுத்துத் தோன்றிய சிலம்பு, மேகலை, பெருங்கதை என்பவை போக, 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை இத்தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பற்றி நின்று நிறைத்த, தேவார, பிரபந்தங்களையும் அவன் கரைத்துக்