பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 31 குடித்திருக்க வேண்டும். இவற்றை அல்லாமல் வடமொழிப் பயிற்சி மிகுதியாகப் பெற்றிருந்தமையின் உபநிடதங்கள் தொடங்கி சங்கரருடைய அத்வைத விளக்கம் வரையும் அவனுடைய கூர்த்த மதிக்கு உணவாயின. நால்வகைப் பிரிவு சங்கப் பாடல்களில் ஈடுபட்ட அவன் அப்புலவர்கள் இயற்கையில் ஈடுபட்டு ஒன்றி நின்று, இயற்கைக்கும் தம் வாழ்க்கைக்கும் இருந்த தொடர்பைக் கண்டு, அதில் தம்மைப் பறிகொடுத்தனர் என்பதை அறிந்தான். அவர்கள் தாம் பிறந்த மண்ணைப் புனல்பரந்து பொன்கொழிக்கும் பூமியாக மட்டும் கருதவில்லை; மண்ணில் தோன்றி மண்ணில் மடியும் தம் வாழ்க்கையில் அந்த மண்ணுடன் பின்னிப் பிணைந்து கிடக்கும் ஆழமான உண்மையை அறிந்து உணர்ந்தமையால் தான் மண்ணை நால்வகை (குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்) நிலமாகப் பகுத்துக் கூறினர். நால்வகையாகப் பிரித்ததுடன் அமையாமல், அதில் உள்ள இயற்கைப் பொருள்களையும் தம்முடன் தொடர்புடையனவாகக் கூறினர். தங்கள் வாழ்வை வளப்படுத்தும் கதிரவன் (பகல்), திங்கள் இரவு என்பவற்றின் தொடர்புடைய காலத்தையும் பெரும்பொழுது என்றும் சிறுபொழுது என்றும் பிரித்துக் கூறினர். இவற்றை முதற்பொருள் (நிலம், பொழுது என்றும், கருப்பொருள் என்றும் கூறிவைத்தனர். இந்த அளவு இயற்கை யைத் தம் வாழ்வுடன் இணைத்துக்கொண்ட அவர்கள் இந்தப் பிரிவின் அடிப்படையிலேயே தங்கள் வாழ்க்கையின் பல கூறுகளையும் பிரித்துக் கண்டனர். திணை என்ற சொல்லுக்கே கூட ஒழுக்கம் என்ற பொருளும் கூறினர். முதல், கரு, உரிப்பொருள்கள் வாழ்க்கையின் கூறுகளைப் பிரித்து அவற்றை உரிப்பொருள் என்று கூறிய அவர்கள், முன்னர்க் கண்ட