பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 33 பகுதியாகும். எழுத்து, சொல் இலக்கணத்துடன் மனித வாழ்வுக்கும் இலக்கணம் கூறும் ஒரு நூல் தமிழ் மொழி தவிர இந்த உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதையும் மனத்துட் கொள்ள வேண்டும். அகம் புறம் பிரிவு - - இந்தப் பொருள் இலக்கண அடிப்படையில் தோன்றிய இலக்கியம் அகம், புறம் என்ற இருபெரும் பகுதிகளாக அமைந்து இத்தமிழ் மக்கள் வாழ்வு முழுவதையும் கவிந்து நிற்கின்றது. இலக்கியம் ஒரு கால மக்களின் மனப்பாங்கை அறிவிக்கும் கண்ணாடி என்பது திறனாய்வாளர் கூறும் சட்டம். அவ்வாறானால், உணர்ச்சி அடிப்படையில் தோன்றிய அகப்பாடல்கள், தமிழர்கள் தம் வாழ்க்கையின் ஒரு பகுதியை எவ்வாறு பகுத்துக்கொண்டனர் என்பதை அறிவிக்கும் பகுதி ஆகும். சமுதாயத்தில் கூடி வாழ்ந்து நாகரிக வளர்ச்சி பெற்ற அவர்கள் பிறருடன் எவ்வாறு பழகினர் என்பதையும், என்ன நினைந்தனர், எவற்றைத் தம் வாணாளில் விழுப்பொருள்கள் (Values) என்று கருதினர், என்பவை முதலானவற்றையும் அறிவிப்பது புறப்பகுதியாகும். - - அகத்தில் இழுக்கு இவற்றைக் கற்றுத் துறையோகிய கம்பநாடன் தன் முன்னோரின் வாழ்க்கை முறையின் குறைவு நிறைவுகளை ஊகித்துக் கண்டிருக்க வேண்டும். - மக்கள் நுதலிய அகன் ஐந்திணை . - தொல்-அகத்திணை-57) என்று தொல்காப்பியம் வரையறுத்துக் கூறிவிட்டமையால், இந்த ஐந்து திணைகளைப் பற்றிச் சிந்தித்த கம்பன் குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் என்ற ஐந்துவகை