பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கம்பன் - புதிய பார்வை ஒழுக்கங்களில் தமிழர் முழு வாழ்வு வாழ்ந்தமையை அறிந்திருக்க வேண்டும். ஆனாலும், அதில் வரும் மருதம் என்ற திணை இவர்கள் வாழ்வை நாசப்படுத்திய பகுதி என்பதையும் திருவள்ளுவர் மூலமாகக் கம்பன் அறிந் திருத்தல் வேண்டும். மருதம் என்பது பரத்தையருடன் வாழும் வாழ்க்கையைச் சித்திரிப்பதாகும். இத் தமிழ் நாகரிகம் சங்ககாலத்திலிருந்த சிறப்பை இழப்பதற்கு இதுவே காரணமாக நின்றது என்பதை யாரும் அறிய முடியும். எனவேதான் சமுதாய நீதி, ஒழுக்கம் பேசவந்த திருக்குறள் பரத்தைமை ஒழுக்கத்தை வலுவாகச் சாடிற்று. பொருட் பொருளார் புன்நலம் தோயார்-அருட்பொருள் ஆயும் அறிவி னவர். . . பொதுநலத்தார் புன்நலம் தோயார்-மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும் திருநீக்கப் பட்டார். தொடர்பு > - திருக்குள்-914, 915, 920 (கருணை நாடும் அறிவுடையார், கையில் கொடுக்கும் பொருளையே பெரிதெனும் பொதுமகளிர் உறவு கொள்ளார். மாட்சிமைப்பட்ட அறிவின் வளர்ச்சியை நாடுபவர், பலருக்கும் பொதுவான மகளிரிடம் உறவு கொள்ளார். கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப அன்பு காட்டும் பொதுமகளிர் தொடர்பு, கள், சூதாடு கருவி என்பன வற்றுடன் தொடர்பு கொண்டவரை இலக்குமி கைவிட்டு விடுவாள்.) - х - - சங்ககால மக்கள் வாழ்க்கையில் அவர்கள் வாழ்வை அழிக்கும் இக்களங்கம் புரையோடிப் போனதைக் கவிஞன் அறிய முடிந்தது. சிலம்புக் கதையும் அவன் எண்ணத்தை வலியுறுத்தியது. - - -