பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கம்பன் - புதிய u്ഞഖ புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்து கோள்தக்கது உடைத்து - (திருக்குறள்-780 (பக்கத்தில் நின்று பார்ப்பவர்கள் கண்ணுள் நீர் நிறையுமாறு வீரங்காட்டி ஒருவன் சாகும் நிலை வருமேயானால், அத்தகைய சாவை யாசித்தாவது பெற வேண்டும்.) - இத்தகைய வீரத்தைப் பாராட்டியதைக் கம்பன் ஏற்றுக்கொண்டாலும், போர் என்பதை விரும்பவில்லை. வாகைத் திணையில் சிறந்தவை புறத்திணையில் குறிப்பிடப் பெற்ற கொடை, வீரம் என்பவை போக, வாகைத் திணையில் குறிப்பிடப் பெற்ற சான்றாண்மை, நல்லொழுக்கம், பிறர் பிழை பொறுக்கும் பண்பு, அருளை மேற்கொண்டு வாழும் வாழ்க்கை, துறவு, காமம் நீத்த சிறப்பு என்பவை கவிஞனின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன. அரசச் செல்வத்தில் திளைத்தவர்கள் சிலர் அச் செல்வத்தைத் துறத்தலையும் இலக்கணம் பேசிற்று. - - - . . . துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் கட்டில் நீத்த பாலி னானும் கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும் (கடிமனைநீத்த பாலின் கண்ணும் என்ற பாடமும் உண்டு) அருளொடு புணர்ந்த அகற்சியானும் காமம் நீத்த பாலினானும் . . . . - (தொல்-புறத்திணை -17) இவை அனைத்தும் கம்பனுடைய மனத்தைக் கவர்ந் திருத்தல் வேண்டும். அதிலும் சிறப்பாகக் கட்டில் நீத்த பாலினா னும் என்பதும், அருளொடு புணர்ந்த