பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 37 அகற்சியானும் என்பதும் அவனைப் பெரிதும் ஆட் கொண்டன. போர், வெற்றி, புகழ் என்பவற்றிலேயே பெரிதும் மயங்கிக் கிடந்த இத்தமிழ்ச் சமுதாயத்தில், அரசு கட்டிலைத் துறப்பதும், அனைத்து உயிர்களிடமும் அருள்கொண்டு துறவு மேற்கொள்ளுதலும், பெருவெற்றி யாகும் என்று நம்பிய ஒரு சிலரும் இருந்தனர் என்பது, கம்பனுக்கு ஒரு தெம்பை அளித்திருத்தல் வேண்டும். இந்த சூத்திரத்தில் வரும் ஓர் அடி, கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும் என்பதாகும். இதன் பொருள் விரிக்க வந்த நச்சினார்க்கினியர், வேதம் முதலிய வற்றாற் கட்டுதல் ஒழுக்கத்தோடு பொருந்திய காட்சி என்று எழுதிவிட்டு, அதற்கு விளக்கமாகப் பின்வருமாறு கூறுகிறார்: "இவை மனத்தான் இவ்வொழுக்கங்களைக் குறிக் கொண்டு ஐம்பொறியினை வென்று தடுத்தலாம். இல்லறத் திற்கு உரியவாக நான்கு வருணத்தார்க்கும் கூறிய அடக்க முடைமை, ஒழுக்கம் உடைமை, நடுவு நிலைமை, பிறர்மனை நயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை முதலியனவாம்." நன்மை தீமை கலந்ததே உலகம் கம்பநாடன் உரையாசிரியர் நச்சினார்க்கினியருக்கு முற்பட்டவன் எனினும், தமிழ் நாகரிகத்தின் சாரத்தை எடுத்துக் கூறும் தொல்காப்பியத்தையும், சங்க இலக் கியங்களையும் கற்காமல் கல்வியிற் பெரியவன் கம்பன் என்ற பெயரை எடுத்திருக்க முடியாது. எந்த ஒர் இனமும் முற்றிலும் சிறந்த பழக்க வழக்கங்களையோ, அன்றி முற்றிலும் தீய பழக்க வழக்கங்களையோ, கைக்கொண்டு வாழ்ந்தது என்பது மானிடசாதி வரலாற்றில் எங்கும் இல்லை. நல்லது தீயது என்ற இரண்டும் கலந்துதான் இருக்கும். . . . . .