பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 39 (குணத்தையும் குற்றத்தையும் தனித்தனியே எடுத்து ஆராய்ந்து இவை இரண்டினுள் எது அதிகமாக உள்ளதோ அதன்படி முடிவு செய்க) - இக்குறள் தனிமனிதனை எடை போடுவதற்கும், ஒர் இனத்தை, ஒரு நாட்டு மக்களை எடை போடுவதற்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. இந்த முறையில், பழந்தமிழரின் பண்பு நலன்களை ஆராய்ந்த கம்பநாடன் இக் குறைகள் நீங்கினால் அச் சமுதாயம் பிற சமுதாயங்கட்கு ஒர் எடுத்துக்காட்டாக அமையும் என்பதையும் கண்டுகொள்கிறான். பண்டைய அரசர்கள் இதனை அடுத்துப் பழந் தமிழ்நாட்டின் அரசியலையும் அதனுடன் தொடர்புடைய பொருளாதாரத்தையும் காண்டல் வேண்டும். குருட்டுப் பற்றினால் அன்றைய தமிழ் மன்னர்கள் ஆட்சி எல்லா வகையிலும் சிறப் புற்றிருந்தது என்று நினைப்பதும், பேசுவதும், ப்ொருத்த மில்லாததாகும். தமிழ் நாட்டின் எல்லையை, ஏறத்தாழக் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டு நூற்றாண்டுகளின் முன்னர் இருந்த நிலையைத் தொல்காப்பியம் எடுத்துக் கூறுகிறது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல் உலகம். - (தொல் பாயிரம்-) என்பதே அதன் பரப்பளவாகும். கிழக்கிலும் மேற்கிலும் கடல் இருந்தமையின் இப்பாடல் அதனை வரையறுத்துக் கூறவில்லை. தென் எல்லை என்று குறிக்கப் பெற்ற குமரி, ஒரு காலத்தே கடலால் கொள்ளப்பட்டு விட்டது என்பதைச் சிலப்பதிகாரம், அதன் உரை முதலியவற்றால் அறிகிறோம். இதனைச் சேர்த்துக்கொண்டு கணக்கிட்