பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 41 போரின் பின் விளைவுகள் போர் என்றால் மக்கள் மக்களுடன் போரிட்டு மடிவதுடன் இவர்கள் போர்கள் நிற்கவில்லை. தோற்றவன் நாட்டையும், ஊரையும், அவனுடைய விளைவயல்களையும் தீயிட்டுக் கொளுத்தி மகிழ்ந்தனர் வெற்றி பெற்றவர்கள். இந்த அளவுக்குப் பகைமை பாராட்டி மனத்தில் வெறுப் புணர்ச்சியை வளர்த்துவிட்டமையால், தோற்றோர். என்றாவது ஒருநாள் பழிவாங்கவே துடிப்பர். எனவே இந்தப் போர்வெறி இத் தமிழ் மன்னர்களை ஆட்கொண்டிருந்தது என்பதை மறுத்தற்கில்லை. போரிட்டு மாய்ந்த இருவரும் தமிழர்களேயாவர். வென்றோன் தோற்றோன் ஆகிய இருவருடைய பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாடு, உணவு, உடை, நினைவு, எண்ணம், குறிக்கோள், வாழ்வு முறை ஆகிய அனைத்தும் ஒன்றேயாம். அவ்வாறு இருக்க இவர்கள் ஒருவரை ஒருவர் பிறவிப் பகையாகக் கருதிப் போரிட என்ன வேற்றுமை இவர்களிடை இருந்தது? நிலப்பிரிவு தவிர வேறு வேறுபாடு ஒன்றும் இல்லாதிருந்தும் இந்த அளவு போர்வெறி கொண்டிருந்ததைச் சங்க காலத்திலேயே பல சான்றோர்கள் கண்டு மனம் நொந்து பாடியுள்ளனர். சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் சோதரர்கள். இருவரிடையேயும் போர் மூண்டதைக் கண்ட கோவூர்கிழார் என்ற சான்றோர் அவர்கள் இருவரையும் அமைதி பெறுமாறு வேண்டிப் பாடுகிறார்: நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே ஒருவீர் தோற்பினும் தோற்பது நும்குடியே - (புறம்-48) (உன் மாலையும் ஆத்தியே உன்னுடன் சண்டை இடுபவனும் ஆத்திமாலையே அணிந்துள்ளான். இருவருள் யார் தோற்பினும் சோழன் தோற்றான் என்றுதான் உலகம் கூறும்.)