பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 + கம்பன் - புதிய பார்வை வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே - (புறம்-5) (நீ தலையில் சூடிய மாலை உன் பகைவர் நாட்டைக் கொளுத்தும் நெருப்பால் வாடுவதாக.) காரிகிழார் என்ற புலவர், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியதாகும் இப்பாடல். இதனைப் பேசுகின்ற அதே புலவர் இதற்கு முதல் அடியில் நின்குடை வேறு யாருக்கும் பணியாமல் முனிவர்கள், சிவபெருமான் என்பவர்கள் எதிரே மட்டும் பணிவதாக என்ற பொருளில், பணியியர் அத்தை, நின் குடையே-முனிவர் முக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே . . . . . (புறம்-6) என்றும் பாடுகிறார். இறைவன், முனிவர்கள் என்பாரின் பெருமை அறிந்து பணிக என்று கூறும் அளவிற்கு அறிவு வளர்ச்சி பெற்று இருந்தும், ஏனோ இவர்கட்கு மனிதனை மனிதன் மதிக்கும் பண்பும், பிறரிடத்து அன்பும் இல்லாமல் குறைந்து போயிற்று என்று தெரியவில்லை. புறத்திணையில் உள்ள பாடல்களில் தொண்ணுறு சதவிகிதம் போர் பற்றிய பாடல்களாகவே உள்ளன. போர் என்று கூறினால் தமிழர் ஒருவருக்கொருவர் செய்து கொண்ட போராகவே அது இருக்கும். இதன் பயனாக ஆக்கபூர்வமான சமுதாய வளர்ச்சி குன்றி இருந்தது என்று நினைப்பதில் தவறு இல்லை. - - அறவுரை கூறுபவர் சிலரே இதன் எதிராக என்றோ ஒருமுறை யாரோ ஒரு புலவர் தான் அன்பு கொண்டுள்ள அரசனைப் பார்த்து அறிவுரை கூறியதும் உண்டு. மாங்குடி மருதனார் என்ற சான்றோர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை 780 அடிகள் கொண்ட