பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 43 மதுரைக்காஞ்சி என்ற கவிதையால் பாடினார். அக் கவிதையில் ஓயாமல் போர் மேற்கொண்டிருந்த பாண்டியனை விளித்து, ‘அரசே! கட்டப்பட்ட முரசம் காலை நேரத்தில் ஒலிக்கப் பகைவர் நாட்டில் வெற்றிகொண்ட படையுடன் கூடிய வன்மை மிக்க அரசர்களாக, இவ்வுலகத்தில் வாழ்ந்து இறந்தவர்களைக் கணக்கிட்டால், கடல் மணலினும் பலராவர் என்ற பொருளில், பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறை படுகண் முரசம் காலை இயம்ப, வெடிபடக் கடந்து, வேண்டுபுலத்து இறுத்த, பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர், கரைபொருது இரங்கும், கணைஇரு முந்நீர்த் திரையிடு மணலினும் பலரே, உரைசெல மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே! . - . (மதுரைக் காஞ்சி-231-237) என்று தொடங்கி, இறுதியாக நன்றாக உறங்கி (713), நல்ல உடலமைப்பைப் பெற்று (724), நின் சுற்றத்தாருடன் இனிமையாக விளங்கி (770 மகிழ்ச்சியுடன் உனக்கென்று இறைவனால் வரையறுத்துக் கொடுக்கப்பெற்ற வாழ்நாளை இனிமையாகச் செலவிடுக 1782) என்ற பொருளில், கோதையின் புனைந்த சேக்கை துஞ்சி- (713) முருகு இயன்றன்ன உருவினை ஆகி- (724) பூத்த சுற்றமொடு பொலிந்து இனிதுவிளங்கி (770) மகிழ்ந்து இனிது உறைமதி பெரும்! . . வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே! . (782) என்று பாடுகின்றார். போர் விருப்பங் கொண்ட மன்னர் கட்கு இவ்வாறு அறிவுரை கூறும் பாடல்கள் அதிகம் இல்லாமையே இங்ங்னம் அறிவுரை கூறும் சான்றோர் அதிகம் இல்லை என்பதைக் காட்டுகின்றது.