பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 + கம்பன் - புதிய பார்வை இந்தக் கவிதைகளைப் படித்து, அற்றை நாளில் வாழ்ந்த நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை ஆராயப் புகுந்தால், அனைவரும் தமிழராக இருந்தும் அவர்களுக்குள் எவ்வித ஒற்றுமையோ, நட்புணர்ச்சியோ, மனித அன்போ அதிகமாக இல்லை என்பதை நினைக்க வேண்டியுள்ளது. தோல்வி அடைந்த மன்னனுடைய நாட்டைத் தீக்கொளுத்தலும், அவன் நாட்டு விளை வயல்களை அழித்துக் கழுதைகளைக் கொண்டு உழுதலும், மனிதாபிமானத்தில் விளைந்த செயல்களாகா. கம்பநாடன் காப்பியம் இயற்றுமுன் இந் நாட்டுப் பண்பாட்டைப் பற்றிச் சிந்தித்தபொழுது, இன்று நாம் வருகின்ற இதே முடிவுக்கு வந்திருப்பான் என்பதில் ஐயம் இல்லை. பழந்தமிழர் அரசியல் வாழ்வு பல்வேறு நன்மைகளைப் பெற்றிருப்பினும், போர்வெறி, ஒற்றுமை இன்மை, மனிதாபிமானக் குறைவு என்ற குறைகளுடன் விளங்கியதை அவன் அறிய முடிந்தது. . குறைகளிடையே ஒரு நன்மை சங்க காலத்தை அடுத்துச் சில்ம்பின் காலம்வரை இத்தமிழரின் வாழ்வு இத்தனை குறைகள் இருப்பினும் ஒடிக்கொண்டுதான் இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. இத்தனை போர்களிடையே வாழ்ந்த மக்கள் எவ்வாறு சமுதாய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பெறமுடியும் என்ற வினா எழுந்தால் அது நியாயமானதே யாகும். இத்தனை குறைகளிடையே, ஒயாது போர் புரிந்தாலும் எப்பொழுது யார் வென்றாலும், அவன் தமிழனே ஆவான். வென்றவன், தோற்றவன் நாட்டின் விளைவயல்களை மட்டுந்தான் கொளுத்தினானே தவிர அவனுடைய மனத்தை எண்ணத்தை மாற்றவில்லை. காரணம், வென்றவன் தோற்றவன் இருவருமே தமிழர்களாகலின் புறத்தே ஏற்பட்ட துன்பம், வாழ்வு முறையை மாற்றவில்லை. அதனால் மேலே