பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 45 கூறிய குறைபாடுகள் பல காலம் வரைப் பொருளாதார ரீதியில் தவிரப் பிற துறைகளில் சாதாரண மக்களின் வாழ்க்கை முறையைப் பாதிக்கவில்லை. இன்னுங் கூற வேண்டுமாயின், இத்தகைய ஒரு குறைகூடத் தம்முடைய சமுதாய, அரசியல் வாழ்க்கையில் ஊடுருவி இருந்தது என்பதை அக்கால மக்கள் பலரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாங்குடி மருதன் போன்றவர்கள் நேரிடை யாக இக்குறைபாட்டை எடுத்துக் கூறாமல், அரசர்களின் வாழ்க்கை முறையைத் திருத்த முயன்றனர். நம்முடைய உடம்பில் எதிர்ப்புச் சக்தி இருக்கின்றவரை உடலில் மறைந்து கிடக்கும் நோய்கள் வெளிவருவதில்லை. ஆனால், புறத்தே இருந்து தொற்று நோய் வந்தால் உண்மையான எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களை அத்தொற்று நோய் பாதிப்பதில்லை. அது குறைந்தவர்களை நோய் பற்றிக் கொள்கிறது. மறைந்து கொல்லும் நோய்கள் ஆயிரம் ஆண்டுகளாக மிக்க நாகரிகத்துடனும், வளமுடனும் வாழ்ந்த சங்ககாலத் தமிழரின் சமுதாய வாழ்வில் 'பரத்தமை என்ற நோயும், அரசியலில் சகிப்புத் தன்மை இன்மை, அன்புடைமை இன்மை, மனித அன்பு இன்மை என்ற நோய்களும் இலைமறை காயாக இருந்து இந்த சமுதாயத்தை உள் அரித்துக் கொண்டிருந்தன. ஆனால், அவை வெளியில் தெரிய வாய்ப்பே இல்லாமல் இருந்தது. கி.பி. நான்காம் நூற்றாண்டு அளவில் களப்பிரர் படை எடுப்பால், இத் தமிழர் வாழ்வு மணலில் கட்டிய வீடாகச் சரிந்துவிட்டது. இந்த வீழ்ச்சிக்குக் காரணம் களப்பிரரின் வன்மை மட்டுமன்று. இத்தமிழர்களுடைய வாழ்வில் புரைஓடி இருந்த மேலே சொன்ன குறைகள்தாம். முதல் சந்தர்ப்பம் ஏற்பட்டவுடன் ஒடிந்து விழ உதவி செய்துவிட்டன. நிலையான ஆட்சி செலுத்திய இத் தமிழ் மன்னர்களை கொள்ளைக் கூட்டத்தாராக வந்து எதிர்த்த களப்பிரர் முறியடித்தது விந்தையே! அரசியல் முறையோ,