பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 + கம்பன் - புதிய பார்வை நிர்மாணிக்கப் பட்ட படைகளோ இல்லாமல் இங்கு வந்த களப்பிரர், இவை இரண்டும் பெற்று ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இத் தமிழகத்தில் வேரூன்றி இருந்த தமிழ் மன்னர்களை வேரோடு களைந்தனர் என்றால், இத் தமிழ் நாட்டில் ஏதோ ஒரு குறை இருந்து, சமயம் வந்தவுடன் இவர்களைக் கவிழ்க்க அதுவே உதவிற்று என்று நினைக்க வேண்டி உளது. - - இவர்கள் வாழ்வின் சரிவை இளங்கோவடிகளின் சிலம்பு ஒரளவு சித்திரித்துக் காட்டிற்று. சமுதாயச் சீர்கேட்டுக்குக் கோவலன் வாழ்க்கையும், அரசியல் சீர்கேட்டுக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்க்கையும் எடுத்துக்காட்டு களாய் அமைந்தன. சிலம்புக்குப் பின் இரண்டு நூற் றாண்டுகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த இந்த இனம் களப்பிரரால் முற்றிலும் சாய்க்கப் பெற்று விட்டது. பாண்டியன் கடுங்கோன் தொடங்கித் தமிழக அரசர் பலருங் கூடி ஆறாம் நூற்றாண்டு அளவில் களப்பிரரை விரட்டித் தம் ஆட்சியை நிறுவினாலும் பழைய நிலையை இத் தமிழர் வாழ்வு மறுபடி அடையவே இல்லை: தமிழ் இலக்கியம் காட்டும் இத்தமிழ் இனத்தாரின் வரலாற்றையும் அதன் குறைவு நிறைகளையும் கம்பநாடன் நன்கு அறிந்து தெளிந்திருந்தான். எந்த அடிப்படையான ஒரு தனிக் காரணம் இந்த மாபெரும் வீழ்ச்சியை, இந்த இனத்திற்குத் தந்தது என்பதை அவனால் உணர முடிந்தது. அறிவும் உணர்வும் - . மனிதன் அறிவு, உணர்வு என்ற இரண்டின் கூட்டால் ஆனவன். விலங்கிலிருந்து அவனை வேறுபடுத்துவது அவன் பெற்றுள்ள அறிவேயாகும். மனிதப் பண்பு என்று எடுத்துக்கொண்டால் அன்பு, அருள் என்பவற்றின் மேல்தான் அது நிலைத்து நிற்கின்றது என்பதை யாரும் மறுக்கமுடியாது. அப்படியானால் அறிவின் பணி என்ன என்ற வினா எழுமன்றோ? அன்பு என்பது, தான் என்ற ஒன்றின்