பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 47 அடிப்படையில் பிறந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்கள், தனக்குத் தொடர்புடையவர்கள் என்பவர்கள் மாட்டு விரிந்து செல்வது. இது அன்பின் இயல்பு. ஆனால் அவ்வாறு செய்கையில், தனக்குத் தொடர்புடையார் தவறு செய்யினும் அதைக் காணாமல் செய்துவிடுகின்றது அன்பு, ஆனால் அறிவுட்ன் கலந்த அன்டானால் தவறு கண்டவிடத்து இடித்துக் கூறித் திருத்த முனையும், தீது ஒரீஇ நன்றின்டால், உய்ப்பது அறிவு 422) என்றும், மெய்ப்பொருள் காண்பது அறிவு (355) என்றும், அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை (315 என்றும் அறநூலாகிய குறள் குறித்துச் செல்கிறது. இத்தகைய அறிவின் துணையை நாடாமல், உணர்வு ஒன்றையே கொண்டு எந்த ஒரு சமுதாயமும் வாழத் தொடங்கினால், அது முழு வாழ்வாகாது. புறத்திலிருந்து சிறு காற்று அடித்தாலும் அந்த இனத்தின் வாழ்வு பாதிக்கப்படும். பழந்தமிழ் வாழ்க்கையை இன்று எடுத்துக்காட்டுவன அவர்கள் காலத்துத் தோன்றிய இலக்கியம்தான். எந்த ஒர் இனத்தின் வரலாற்றை அறிய வேண்டுமானாலும் அந்த இனத்தின் இலக்கியந்தான் சிறந்த கருவியாகும் என்பதை வரலாற்றாசிரியர்களும் திறனாய்வாளர்களும் கண்டு தெளிந்து கூறியுள்ளனர். இலக்கணம் அறியாதவர்களின் இலக்கிய அறிவு ஒருபுடை வளர்ச்சியுடையது. அதேபோல இப் பழந்தமிழர் வாழ்க்கையில் உணர்வு பெற்றிருந்த இடத்தில் ஒரு மிகச் சிறு பங்கைக்கூட அறிவு பெற்றிருந்ததா என்ற வினாவிற்கு சரியான விடை இன்றுகூடக் கூற முடியவில்லை. இத்துணைச் சிறந்த நாகரிகம்தான், அந்த நாகரிகத்தின் கொழுந்து போன்ற வெளிப்பாடுதான், அவர்கள் ஆக்கிய இலக்கியம். - உணர்ச்சிக்கே அதிக இடம் அகவாழ்க்கைக்கு ஐந்து பெரும் பிரிவுகள் வகுத்து, அவற்றுள் பல்வேறு துறைகளும் வகுத்தான் பழந்தமிழன்.