பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கம்பன் - புதிய பார்வை வாழ்க்கையை அணு அணு வாகச் சுவைத்தான். அதேபோலச் சமுதாய வாழ்க்கை என்னும் போதும் அகத்தில் இடம்பெற்ற உணர்ச்சி அடிப்படையில், ஒயாது போர் செய்தல், குடித்தல், பிறருக்கு வாரி வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டான். இந்த அக, புற வாழ்க் கையின் இடையே நான் யார் என் உள்ளம் யார்? என்ற வினாவை அவன் கேட்டதாகவோ, அவ் வினாக்கட்கு விடை காண முயன்றதாகவோ அறிய வாய்ப்பில்லை. இலக்கணம் வகுத்த தொல்காப்பியனார், புல் பூண்டில் தொடங்கி மனிதன் ஈறாக உயிர்களுள் ஒரு தொடர்பு உண்டு என்பதைக் குறிப்பாகக் கூறினார் என்பது தவிர, இத்தமிழன் மனிதனாகப் பிறந்த தன்னைப் பற்றியும், இந்தப் பரந்த உலகம் பற்றியும், இதன் கண்ணுள்ள பிற உயிர்கள் பற்றியும், அந்த உயிர்கட்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றியும், எந்த வினாவையும் எழுப்பின தாகவோ, அதற்கு விடைகாண முயன்றதாகவோ அவன் படைத்த இலக்கியங்களிலிருந்து அறிய முடியவில்லை. வடமொழியில் உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேயே சங்கப் பாடல்களுள் பல தோன்றி இருக்க வேண்டும். அப்படி இருந்தும் அவற்றின் துணைகொண்டு மட்டும் ஆராயப்பட வேண்டிய மேற்கூறிய வினாக்கள் எதையும், இவர்கள் எழுப்பியதாகக் கூறும் எந்த இலக்கியமும் இன்று இல்லை. தத்துவ ஆராய்ச்சியில் இந்நாட்டவர் ஈடுபட் டார்களா என்றும் தெரியவில்லை. அப்படி ஈடுபட்டிருந்து, ஏதேனும் நூல்கள் எழுதியிருந்தால் இன்று அவற்றில் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை. வாகைத் திணை உணர்ச்சிக்கு அளவுமீறி இடங்கொடுத்து விட்ட்மையால் அறிவாராய்ச்சிக்கோ, தத்துவ விசாரணைக்கோ வாழ்வில் நேரம் கிடைக்கவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அன்றியும் தொல்காப்பியப் புறத்திணை இயல் 230 வரிகளில்