பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 49 அமைந்துள்ளது. புலனடக்கம் பற்றியும், துறவு பற்றியும், ஆசை நீக்கம் பற்றியும், அருளைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய இன்றியமையாமை பற்றியும் மொத்தம் நான்கே வரிகள்தாம் உள்ளன என்றால், அற்றைநாள் தமிழர் இவை பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்பது வெள்ளிடை மலையாகும். இவ்வாறு கூறுவதால் புலனடக்கம், அருளுடைமை, துறவு என்பவற்றை மேற்கொண்டு வாழ்ந்த தமிழர்களே அந்த நாளில் இல்லைபோலும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. மக்கள் கூட்டத்தில் மிக மிகச் சிறுபான்மையினர் மட்டுமே இவற்றின் உண்மை கண்டு வாழ முற்பட்டனர். எனவேதான் அதனைப் பெரிய வியப்புடைய செயலாக மற்றவர்கள் ஏற்றிப் போற்றினர். ஆகவேதான், இந்த நான்கையும் தொல்காப்பியம் வாகைத்திணையுள் அடக்கிற்று போலும். வாகை என்றால் வெற்றி, புலனடக்கம், தன்னலத்தைத் துறத்தல் என்பவை, ஒருவன் தன்னையே வெற்றி கொள்வதாகும். காஞ்சித் திணை தமிழ் இலக்கணம், நிலையாமையைக் காஞ்சித் திணையுள் அடக்கிக் கூறுகிறது. பல்லாற்றாலும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே என்று காஞ்சித்திணை விளக்கம் பேசுகிறது. தொல்காப்பியத்தில் போர் செய்து மடிதல், மடிந்த உறவினனைக் கண்டு வருந்தும் மனைவியர், உறவினர் மனநிலை என்பவை பற்றி இத்தினை பேசுவது உண்மை தான். ஆனால் நிலையாமை பற்றி நினைந்து, ஆத்ம விசாரணை செய்ததாகக் குறிப்பும் இல்லை. - ஆன்ம விசாரணை ஆன்ம விசாரணை இருந்ததா என்பதை அறியமுடியா விடினும் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பவை பற்றித் தொல்காப்பியம் பேசுகிறதைக் காண்கிறோம். ஆனால் இவற்றின் சரியான பொருள் என்ன என்று கூறமுடியாதபடி