பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பக்தி இயக்கம் பக்தி இயக்க காலம் சங்க காலம், சிலம்பு மணிமேகலைக் காலம், களப்பிரர் இடையீட்டுக் காலம் என்பவை கழிந்தபிறகு, கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பக்தி இயக்கக் காலம் தோன்றுகிறது. களப்பிரர் இடையீட்டில் இருந்த மூன்று நூற்றாண்டுகளிலும் இத் தமிழர், உணர்ச்சி துளையமாட முடியவில்லை. இவர்கள் நாகரிகத்தை, பண்பாட்டை வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆட்சி செய்த காலம் ஆகலின், இத் தமிழர்களின் வாழ்க்கையில் பெரியதொரு மாற்றம் நிகழக் காரணம் ஏற்பட்டது. அதுவரை சுதந்திரமாகத் தன் வாழ்க்கையை வீட்டினுள்ளும் வெளியிலும் நடத்திவந்த தமிழ்ச் சமுதாயத்திற்குப் புதிய சோதனை ஏற்பட்டது. இந்தக் களப்பிரர் தமிழரும் அல்லர்; தமிழ் மொழி பால் வெறுப்பையும் காட்டியவர்கள்; இத் தமிழ்நாட்டில் தோன்றி வளர்ந்த பழஞ் சமயங்களாகிய சைவம் வைணவம் என்ற இரண்டையுமே ஏற்றுக் கொள்ளாத வர்கள். இன்னுங் கூறப்போனால், இத் தமிழர்கள் எவ்வெவ்வற்றைத் தம் வாழ்வில் விழுப்பொருள்கள் (Values in life) என்று கருதினார்களோ அவை அனைத் தையும் புறக்கணித்தவர்கள். - அமைதியை உள்ளே நாடல் இத்தகைய கூட்டம் தமிழகம் முழுவதையும் கைப்பற்றி மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் ஆட்சி புரிந்தது என்றால், இத் தமிழர்கள் கதி என்னவாக இருந்திருக்கும் என்று கூறத் தேவை இல்லை. இந்த இடைக்காலத்தில்