பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 + கம்பன் - புதிய பார்வை ஒரு தமிழ் இலக்கியங்கூடத் தோன்றவில்லை என்பதையும் அறிதல் வேண்டும். புறத்தில் இத்தகைய துன்பமும் குழப்பமும் உண்டாகும்பொழுது மனிதன் என்ன செய்வான்? புறத்தே காணமுடியாத அமைதியை, இன்பத்தை அகத்தே காண முற்படுவான்! தனிமனிதனுக்குரிய இந்த இயல்புதான் ஒர் இனத்துக்கும் பொருந்துவதாகும். தமிழர்கள் சேரன், சோழன், பாண்டியன் என்று பெயர் வைத்துக்கொண்டு தம்முள் போரிட்ட பொழுது வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்தன; ஆனால் தோற்றவனும் தமிழன்; வென்றவனும் தமிழன். எனவே தோற்றவனுடைய வாழ்க்கையில் புறத்தே ஏற்படும் இழப்பைத் தவிர வேறு நட்டம் ஒன்றும் இல்லை. அடுத்து, அவன் வெற்றி பெறும் வாய்ப்பும் விரைவில் ஏற்பட லாயிற்று. ஒயாத பெருந் துன்பத்தை அவன் அனுபவிக்கும் நிலை இதனால் ஏற்படவில்லை. இதன் எதிராகக் களப்பிரர் ஆட்சியில் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டன. சேரர், சோழர், பாண்டியர் இவர்களின் கீழ் வாழ்ந்த குறுநில மன்னர்கள் ஆகிய அனைவரும் தனித்தோ, ஒன்றாகச் சேர்ந்தோகூடக் களப்பிரரை ஒன்றுஞ் செய்ய முடிவில்லை. எனவே, தமிழன் தன் னுடைய எதிர்காலம் எத்தகையதாக அமையும் என்று நினைக்கையிலேயே மனம் குழம்பினான். இந்நிலைதான் அவன் அகமுகமாக அமைதி காண வழிவகுக்கும் சூழ் நிலையை உருவாக்கிற்று. ஒர் இனம் முழுவதும் இந்தத் திசையில் போக முற்படும்பொழுது அதற்கேற்ற முறையில் அந்த இனத்தில் பெரியோர்கள் தோன்றுவர். எனவேதான் ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை, பன்னிரண்டு ஆழ்வார்களும், நான்கு நாயன்மார்களும், பற்பல அடியார்களும் வைணவத் தொண்டர்களும், ஆன்மிகம் வளர்க்கும் ஞானிகளும் இக்குறிப்பிட்ட காலத்தில் தோன்றலாயினர்.