பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 53 பக்தி வழி ஏன்? அகமுகமாகக் கருத்தைச் செலுத்திய தமிழினத்தில் உபநிடதம் போன்ற ஞான நூல்களை ஆக்கும் ஞானிகள் தோன்றாமல், பக்தி மார்க்கத்தைப் பரப்பும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றக் காரணம் யாது என்ற வினா எழுவது நியாயமானதே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணர்ச்சி வாழ்க்கை வாழ்ந்துவிட்ட இத் தமிழர்களைத் திடீரென்று புதுவழியில் செலுத்த முடியாது. எனவே, அவர்கள் பெரிதும் பழகிய உணர்ச்சியையே வழியாகக் கொண்டு பக்தி மார்க்கம் வளர்க்கும் வழியை ஆழ்வார்களும், நாயன்மார்களும் கடைப்பிடித்தனர்.துன்பமுற்றவர்கட்குப் பக்தி வழி அமைதி தருவதுபோல் வேறு எந்த வழியும் பயன்படாது. புலனடக்கம் செய்து பழகாதவர்கட்குத் திடீரென்று புலனடக்க வழியைக் கூறினால் அவர்கள் துன்பம் மிகுதியாகுமே தவிர குறையாது. பொறி, புலன்களை நன்கு பயன்படுத்தி அவற்றின் வழி இன்பங் கண்டவர்களை மாற்ற வேண்டுமாயின் அந்தப் பொறி புல்ன்களை வைத்துக் கொண்டேதான், ஒரு வழி வகுக்க வேண்டும். அழகிய பொருளைக் கண்டு அனுபவித்துப் பழகியவர்கட்கு, முருகனும், திருமாலும் அழகின் வடிவம் என்ற நினைவை உண்டாக்கி, அவர்களின் கண்ணாகிய பொறியை ஆண்டவனின் வடிவழகில் ஈடுபடச் செய்தனர். இனிய இசை, ஆடல் முதலியவற்றில் ஈடுபட்டுப் பழகிய தமிழர்கள் மறுபடியும் அதே இசையில், ஆடல் பாடல்களில் மூழ்கினர். ஆனால் பக்திவழிக் காலத்தில் வளர்ந்த இசை நாடக வளர்ச்சியில் ஒரு முக்கியமான வேறுபாடும் இருந்தது. கலை யாருக்குச் சொந்தம்? களப்பிரருக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் பரத் தையரின் ஆடல், பாடல், இசைகளில் இன்பங் கண்டனர். கோவலன், மாதவியின் ஆடலில் மயங்கினதும்,