பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 + கம்பன் - புதிய பார்வை பாண்டியன் ஆடலில் மயங்கினதும் எடுத்துக்காட்டுகள் பரத்தையர் வீட்டில் தலைவன் இன்னிசை கேட்டு மகிழ்ந் தான் என்பதை ஒர் அகப்பாடல் மூலம் அறிகிறோம். 'பரத்தை வீட்டிற்குப் புறப்பட்டானாம் ஒரு தலைவன். புறப்படும் நேரத்தில் அவனுடைய இளம் மகன் அவன் கால்களைக் கட்டிக்கொண்டு தன்னைத் துரக்கிக்கொள்ள வேண்டும் என்றும், தந்தை தன்னுடனேயே இருக்க வேண்டும் என்றும் அடம் பிடித்தானாம். குழந்தையை ஏமாற்ற விரும்பாத அத்தந்தை முழவு முதலிய கருவி களுடன் பரத்தை வீட்டிலிருந்து இனிய இசை உடனே வா வா என்று இத் தலைவனை அழைப்பது போல் வெளிப்பட்டாலும், வீட்டை விட்டுப் போகவில்லை என்ற பொருளில், மணிபுரை அவ்வாய் மார்பகம் சிவனப் புல்லி, பெரும! செல் இனி அகத்து’ எனக் கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான் அமுங்கினன் அல்லனோ, அயர்ந்த தன் மனனே - - (அகம்-56 இந்த அளவு ஈடுபாடுடைய மக்களை முற்றிலும் அவ் வழியிலிருந்து மாற்ற இயலாது. எனவே இசையையும் நாட்டியத்தையும் கோயிலில் ஏற்படுத்தினர். பொறி புல மடைமாற்றம் பொறி, புல இன்பங்களில் அதிகம் ஈடுபடுபவர்களை மாற்ற வேண்டுமானால், புலனடக்கம் பற்றி அவர்களிடம் பேசிப் பயன் இல்லை. மனத்தத்துவம் அறிந்தவர்கள் இத்தகையவர்களைத் திருத்த ஒரே வழியைத்தான்