பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 55 கையாளுவர். அதுவே அவர்கள் பொறி புலன்கள் தாமாகச் செல்லும் வழியிலேயே செல்லவிடாமல் தடுத்து, அதே நேரத்தில் அப்புலன்கள் வேறு வழியில் செல்லுமாறு மடைமாற்றம் (Transformation) செய்வதாகும். நாயன் மார்களும், ஆழ்வார்களும் இந்த மடைமாற்றப் பணியைத் தான் மேற்கொண்டனர். மடைமாற்றம் என்றால் என்ன? ஒரு திசையில் செல்லும் தண்ணிரை, வேறு திசைக்குத் திருப்பி விடுவதையே மடைமாற்றம் என்று கூறுகிறோம். காதுகள் இசையைக் கேட்டுத்தான் தீர வேண்டும் என்றால், நல்லது. பரத்தை வீடு சென்று கேட்பதைவிடக் கோயிலிற் சென்று கேட்க வழி செய்தனர். எனவேதான் தமிழகக் கோயில்கள் ஐந்து பொறிகட்கும் இன்பந் தருகின்ற கலைக்கூடங்களாக அமைந்தன என்பதை அறிதல் வேண்டும். இவ்வாறு கூறிய நம்முடைய பெரியவர்கள் உருவ வழிபாட்டை ஏற்பாடு செய்தனர். அந்த உருவத்தையும் அழகின் கொள்கலமாகச் செய்தனர். - - குடதிகை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ! என்செய்கேன் உலகத்திரே - 'நாலாயிரம்-890) குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

  • , (திருமுறை-4-18-4) (மேற்குத் திக்கில் தலையை வைத்துக் கிழக்கில் திருவடிகளை நீட்டி, வடக்கில் முதுகைக் காட்டி தென் திசையிலுள்ள இலங்கையைப் பார்த்துக்கொண்டு கடல்