பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 + கம்பன் - புதிய பார்வை நிறமுள்ள என் தந்தையாம் இறைவன் ஆதிசேடன் உறங்குவதைக் கண்டு என் உடல் உருகுகிறது. (வளைந்த புருவமும், கொவ்வைக் கனிபோன்ற சிவந்த வாயில் புன்சிரிப்பும், குளிர்ந்த சடையும், பவள நிற மேனியில் திருநீறும், அழகிய தூக்கிய திருவடியும் கண்டால் இந்த மானுடப் பிறவியைக் கூட வேண்டும் என்று கூறுவேன்.) என முறையே ஆழ்வாரும், திருநாவுக்கரசரும் பாடு கின்றனர். சிற்பக் கலையின் முடிமணியாக விளங்கும் இந்த வடிவங்கள் அழகின் உறைவிடமாக அமைக்கப் பெற்றதால் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாயின. நம்மூர்ப் பகுத்தறிவுவாதி, இந்தக் கலைக் கருவூலங்களை எடை போட்டுப் பார்க்கிறான். ஆனால் நம் சமய நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத மேலை நாட்டான் இந்த வடிவங்களை எடைக்கணக்கில் பார்ப்பதில்லை. அழகின் உறைவிடமாக இவற்றை அவன் பார்ப்பதால்தான், ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டுச் செய்யப்பெற்றுக் களிம்பு ஏறிப்போன சிவபுரம் நடராச வடிவத்திற்கு ஒரு கோடி ரூபாய் தந்து வாங்கிக் கொள்கிறான்! இவ்வாறு ஆழ்வார்களும் நாயன்மார்களும் உருவ வழிபாட்டை உயர்த்திக் கூறினதால், அவர்களும் ஆன்ம முன்னேற்றமும் ஞானக் காட்சியும் இல்லாத நம்போன்ற மனிதர்களோ என்று நினைத்துவிட வேண்டா, தத்தவ அடிப்படையில் அறிவு வாதம் எத்துணைத் துரம் செல்ல முடியும் என்பதையும் அவர்களே கூறியுள்ளனர். உளன் எனில் உளன் அவன், உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள் உளன் என, இலன் என, அவை குணம் உடைமையில், உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே - (நாலாயிரம்-209.)