பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 57 ஈறாய் முதல் ஒன்றாய் இருபெண் ஆண்குணம் மூன்றாய் மாறாமறை நான்காய் வருபூதம் அவை ஐந்தாய் ஆறு ஆர்சுவை, ஏழோடு இசை எட்டுத்திசை தானாய் வேறாய் உடன் ஆனான் இடம் விழிம்மிழலையே (திருமுறை-1-12-2) இத்தகைய மெய்ப்பொருளுணர்வுடைய இப்பெரு மக்கள் பின்னர் ஏன் உருவம் முதலியவற்றையும் கதை களையும் பாடினார்கள் எனின், சாதாரண மனிதர்கள் மனத்தையும், பொறி புலன்களையும் மடைமாற்றம் செய்வதற்கேயாம் என்பதையும் அறிதல் வேண்டும். சிறு குழந்தைகட்கு மாம்பழம் என்று சொல்லிக் கணிதக் கூட்டல், கழித்தல் சொல்லித் தருகிறோம். அதே குழந்தை வளர்ந்து பெரியவனானவுடன் x, y வைத்துக் கணக்குச் சொல்லித் தருகிறோம். நம்மில் சாதாரண நிலையி லுள்ளவர்கட்குப் பல பாடல்கள் பாடினர். வளர்ந்த நிலையிலுள்ளவர்கட்கு அதிகம் கூறத் தேவை இல்லை. எனவே குறைவான பாடல்களைத் தத்துவ ரீதியில் பாடிச் சென்றனர். களப்பிரர் இடையீட்டால் தம் வாழ்வும், நாகரிகமும் சிதைந்து போனதால் மனம் வெதும்பி இருந்த தமிழர்கட்கு, நாயன்மார்களும், ஆழ்வார்களும் செய்த சேவை அளவிடற்பாலதன்று. புறத்தே அமைதியைக் காணமுடியாமல் தவித்தவர்கட்கு அகத்தே அமைதியைக் காண அவர்கள் வழிவகுத்தனர்! மொழி செய்த பணிகள் இயற்கையைப் போற்றுதல், ஆடல் பாடல் முதலிய கலைகளைப் போற்றுதல், பெண்களுக்குச் சமுதாயத்தில் சம உரிமை வழங்கல் முதலிய பல அடிப்படை விழுப் பொருள்களையும் (Values in Life) பக்தி இயக்கத்தை வளர்த்த இப்பெரியார்கள் பெரிதும் போற்றி வளர்த்தனர். இவை அனைத்துக்கும் மூலகாரணமாய் இருந்தது எது?