பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 + கம்பன் - புதிய பார்வை தமிழர்தம் தனித்தன்மை பெற்ற நாகரிகத்தையும், பண்பாட்யுைம் வளர்ப்பதற்குப் பேருதவி புரிந்தது எது? அந்த இனத்தாருடைய ஒப்பற்ற தமிழ் மொழியே ஆகும் என்றால் அதில் யாரும் மறுப்புக் கூற முடியாதன்றோ? தமிழர்கட்குத் தம் நாட்டின் மேலும், மொழியின் மேலும் இருந்த பற்று அளவிடற்கரியது. சங்க காலத்தில் இருந்த மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வெளியே காட்டிக்கொள்ளத் தேவை இருக்கவில்லை. ஆள்வோனும் தமிழன்; அதிலும் புலவர் பாடும் புகழுடைய தமிழன்; ஆளப்படுவோனும் தமிழன். எனவே நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும் வெளியே தெரியும்படிக் கர்ட்டிக் கொள்ளவோ வளர்க்கவோ தேவை இருந்ததில்லை. அதனால் சங்கப் பாடல்களில் இவை பற்றிக் கூறும் பாடல்கள் இல்லை. சிலப்பதிகார காலத்திலும் இத்தகைய நிலை தோன்றவில்லை என்றாலும், ஒவ்வொருவர் மனத்திலும் அது நிறைந்திருந்து, தேவை ஏற்படும்பொழுது வெளிப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வழக்கு உரைக்கச் சென்ற கண்ணகியை அம் மன்னன் 'அம்மா! நீ யார்? நீர் ஒழுகுகின்ற கண்களுடன் என்முன் வந்த காரணம் யாது? என்று கேட்கிறான். உடனே கண்ணகி விடை கூறத் தொடங்குகிறாள்: தேரா மன்னா! செப்புவது உடையேன் எள்அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும், வாயில் கடைமணி நடுநா நடுங்க, ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்; பெரும்பெயர்ப் புகார் என் பதியே... வழக்குரை காதை-50-5) (ஆராய்ச்சி இல்லாத மன்னா! சொல்லப் போவதைக் கேட்பாயாக. மிக்க சிறப்பினையுடைய தேவர்களும் வியப்படையும்படியாக ஒரு புறா பட்ட துயரத்தைத்