பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 59 தீர்த்தவன் (சிபியாகிய எங்கள் நாட்டுக்காரன்); அவனல்லாமல் மனை வாசலில் கட்டியிருந்த மணி ஒலித்ததையும், பசுமாடு ஒன்று கண்ணில் நிறைந்த நீருடன் நிற்பதையுங் கண்டு, தன் உள்ளம் கொதிக்கத் தன் பெறுதற்கரிய புதல்வனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்றவனாகிய மனுநீதிச் சோழன்; இவ்விருவரால் பெயர் பெற்ற ஊராகிய புகாரே எம் ஊர்.) - என்று கூறுவதன் மூலம் தன்னுடைய நாட்டுப்பற்றையும் பேசுகிற போக்கில் தெரிவிக்கிறாள். மொழிப்பற்று வெளிப்படப் பேசினர் களப்பிரர் இடையீட்டிற்குப் பிறகு, நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்ற இரண்டையுமே வெளிப்படப் பேசவேண்டிய நிலை தோன்றிவிட்டது. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருஞான சம்பந்தர், தம்மைத் 'தமிழ் விரகன் (338), முத்தமிழ் விரகன், தமிழ்ஞானம் மிகுபந்தன் (140, நற்றமிழ்க்கு இன்துணை ஞான சம்பந்தன் (830), என்றும்- ஞாலம் மல்கு தமிழ்', ஞானத் தமிழ்' (1470), சங்கம் மலி செந்தமிழ் (3602, தமிழோடு இசை ஆனவன்' என்பவற்றுடன்- இவை போன்ற கருத்துகளை நூற்று நாற்பது இடங்கட்குமேல் தம் தேவாரத்தில் வைத்துப் பாடியுள்ளார். திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய இருவருங்கூடத் தமிழ் என்று கூறும்போதே அதனைத் தெய்வத் தமிழ் என்றே கூறலாயினர். இனி ஆழ்வார்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் மொழிப் பற்றும் நாட்டுப்பற்றும் பரந்து கிடப்பதைக் காண முடியும். வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ்வில்லி புத்துர்மன் விட்டு சித்தன் தன் கோதை வாய்த் தமிழ்' - (நாலாயிரம்-523) இன்னிசையில் மேவிச் சொல்லிய இன்தமிழ் ( "707)