பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 + கம்பன் - புதிய பார்வை குலசேகரன் சொல்செய்த சீரார்ந்த தமிழ் மாலை ( "740) கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டுப் பொங்கு நீர்பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் ( "894) கலியன் ஒலிசெய் தமிழ் மாலை ( "997, பால்ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ( "2136) இங்குக் காட்டப்பெற்ற உதாரணங்கள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோற்றைப் பதம் பார்ப்பது போலவே யாகும். ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியுடன் கலந்து ஊட்டிய தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் இத் தமிழர்கள் வாழ்வில் பெரிய அளவுக்கு அமைதியைத் தந்ததுடன், அவர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்தவும் பயன்பட்டன. புலனடக்கத் தேவை பக்தி வழியைப் போற்றிப் பரப்பும் பொழுதேகூட இப்பெருமக்கள், மனிதர்கள் வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடும், புலனடக்கமும், குறிக்கோளும் பெற வேண்டும் என்பதை வற்புறுத்தினர். எத்துணை உணர்ச்சி வாழ்க்கை வாழ்ந்தாலும் மேலே கூறப்பெற்ற மூன்றும் இன்றியமையாது வேண்டப்படுவன. மனிதனை விலங்கு வாழ்க்கையிலிருந்து வேறுபடுத்துபவை மேலே கூறப்பெற்ற மூன்றுந்தான். கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற முறையில் விலங்குகள் வாழ்கின்றன. பசி எடுத்தபொழுது உண்டு, இன வளர்ச்சி செய்து, சினம் வரும்பொழுது தம்முள் போரிட்டுக் கொள்கின்றன. உணர்ச்சி வாழ்க்கை வாழும் மனிதனும் இதிலிருந்து அதிகம் வேறுபட்டவனல்லன். முதுகெலும்பு படுக்கை வசத்திலிருந்து மேல் நோக்கிய வசத்தில் வளரத் தொடங்கிய நாளிலிருந்தே, மனிதனுக்குப் பகுத்து அறியும் அறிவு தரப்பெற்றுள்ளது. இதை மனிதன் என்று