பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- முன்னுரை பல ஆண்டுகளாகக் கம்பனைப் பயின்றும் மேடைகளில் பேசியும் வரும்பொழுது இடை இடையே ஓர் எண்ணம் தோன்றலாயிற்று. ஒப்பற்ற இலக்கியக் காப்பியம் ஒன்றை இத் தமிழ் மொழியில் படைக்க வேண்டும்; அதன் பயனாகத் தன் புகழ் சாகா வரம் பெற்று நிலைபெற வேண்டும் என்று கருதிக் கம்பநாடன் இக் காப்பியத்தைப் படைத்தானா? என்று என்னையே பல சமயங்களில் கேட்டுக்கொண்டதுண்டு. உலகம் விரும்பினாலும் சாகடிக்க முடியாத ஓர் ஒப்பற்ற காப்பியத்தைப் படைக்கப்போகிறேன்’ என்று மில்டன்’ கூறியது போலக் கம்பனுக்கும் ஒரு குறிக்கோள் இருந்திருக்குமோ? என்று பலகாலம் நினைத்ததுண்டு. இவ்வுலகில் வாழும் மக்களை உய்கதி அடையச் செய்யும் தாரகம் இராமபக்தி என்று நினைத்து அதனை வளர்க்க வேண்டும் என்று கருதியே இக் காப்பியத்தைப் படைத்தான் போலும் என்று சில காலம் எண்ணி இருந்தேன். வைணவ சமய மறுமலர்ச்சிக்கு வழிகோல வேண்டும் என்று கருதினானோ என்ற ஐயமும் தோன்றியதுண்டு. ஆழ்வார்களின் அருளிச் செயல்களில் ஈடுபட்ட அவன், அவர்கள் செய்தவற்றிற்கும் மேலாகத் தான் ஒரு நூலை இயற்றி, அச் சமய வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று நினைத்தான் என்று கருதுவதும் தவறு என உணர்ந்தேன். நூலில் மேலும் மேலும் தோயும்பொழுது இராமன் என்ற பெயரை, மூலப் பரம்பொருளுக்குப் பெயராக இக் கவிஞன் பயன்படுத்துகிறானே தவிர, மும்மூர்த்திகளுள்